கொடி இடைக்கான பயிற்சி.....
Page 1 of 1
கொடி இடைக்கான பயிற்சி.....
கொடி போன்ற இடை என்பது பலரின் கனவு முக்கியமாக பெண்கள் இடை சிறுத்து இருக்க ஆசை கொள்கின்றனர்.. வயிறு அதை சுற்றியுள்ள பகுதிகள் மெலிந்து இருத்தல் அழகான உருவமைப்பிற்கு வெகு முக்கியமானது.. நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு சத்தானது முதலில் வயிறு அதை சுற்றியுள்ள பிரதேசங்களிலேயே அதிகம் படிகின்றது....
இதுவே தொந்தி பிரச்சினைக்கு முதல் காரணமாகும் ... இரண்டாவது வயிற்றில் உள்ள தசைகள் தொய்வடைவது .. இக்காரணத்தினாலேயே பெரும்பாலான பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் வயிறு பெருத்து விடுகின்றது.. முதல் காரணமான கொழுப்பினால் உண்டாகும் தொந்தி பிரச்சினைக்கு உணவுக்கட்டுப்பாடு தான் சிறந்த மருந்து அத்துடன் வயிற்றில் உள்ள தசைகளுக்கான பயிற்சியை செய்தல் அவசியம்..
இரண்டாவது காரணமான வயிற்றில் உள்ள தசைகள் தொய்வடைவதால் ஏற்படும் தொந்தியை வயிற்று தசைகளுக்கான பிரத்யேகமான பயிற்சிகளால் மட்டுமே இதை சரி செய்ய முடியும். முதலில் வார்ம் அப்பயிற்சியும் அதை தொடர்ந்து ஸ்டெரச் பயிற்சியும் செய்த பின் மூச்சுப்பயிற்சியை செய்ய வேண்டும்
முதலில் வயிற்றை உள் இழுத்து கொண்டு மூச்சை ஆழ உள்ளிழுத்து வெளி விட வேண்டும் இவ்வாறு பத்து முறை செய்தல் வேண்டும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சீந்தில் கொடி
» கொடி இடைக்கான பயிற்சி.
» கொடி இடை கிடைக்க எளிய பயிற்சி
» கொடி இடை கிடைக்க எளிய பயிற்சி
» கொடி வகை
» கொடி இடைக்கான பயிற்சி.
» கொடி இடை கிடைக்க எளிய பயிற்சி
» கொடி இடை கிடைக்க எளிய பயிற்சி
» கொடி வகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum