கொடி வகை
Page 1 of 1
கொடி வகை
ஆதொண்டை:
மண்டைக்குடைச்சல், வாத பித்தம், நெஞ்சில் கபாதிக்கம், வாத குடைச்சல் ஆகியவை நீங்கும்.
பெருங்கட்டுக்கொடி:
இதனால் பெரும்பாடு, நாவறட்சி, பித்தத்தினால் கை, கால் எரிச்சல் நீங்கும்.
சிறுகட்டுக்கொடி:
இதனால் சீதரத்த பேதியும், மேக நீரும் குணமாகும். சரீரத்திற்கு குலிர்ச்சியை தரும்.
சிறுகுறிஞ்சாக்கொடி:
வாத ரோகம், சீதபேதி, மாதாந்திர உதிரச்சிக்கல், அஸ்திசுரம், காணாக்கடி விஷம், வாத சுரம், சந்நிபாத சுரம், கபசுரம், தாக நோய் ஆகியவை நீங்கும்.
இண்டுக்கொடி:
பீநசம், ஜலதோஷம், கபால குடைச்சல், முகான்னி பாதம் ஆகியவி நீங்கும்.
கற்பூரவள்ளி:
காசம் என்னும் பொடி இருமல், அம்மை கொப்புளங்கள், சிலேஷ்ம தோஷம், புறநீர் கோவை, வாதக்கடுப்பு, மார்பில் கட்டும் கபம் ஆகியவை நீங்கும்.
முசு மல்லிகை:
சோகை, காமாலை, ஆகந்து வீக்கம், விஷபாக ரோகம், பிரமேகம் ஆகியவை போகும்.
ஊசி மல்லிகை:
காட்டிலுள்ள ஊசி மல்லிகைக்கு கண மாந்தம், வயிற்றுப்பிசம், சிசுக்களுக்கு உண்டாகிற உதிர சம்பவ பிணிகள், சுரம், சோகை ஆகியவை போகும்.
மிளகரணை:
கபவிருத்தி, அஜீரண வாயு, பித்த சூலை, சயம், காசம், சுவாசம், வயிற்றுப்பிசம் ஆகியவை போகும்.
நாய்ப்பாகல்:
பீனிசத்தை நீக்கும். சாதிலிங்கத்தையும், பாஷாணத்தையும் சுத்தி செய்யும்.
பிரண்டை:
இதை வச்சிர வல்லி என்றும் கூறுவர். பிரண்டையை நெய் விட்டு வறுத்து அரைத்து கொட்டைப்பாக்கு பிரமாணம் எட்டு நாள் அந்தி சந்தி சாப்பிட்டால் ஆசனத்தினவும், இரத்த மூலமும் ஓழியும். இதை பற்பல ஔஷதங்களாக பிரயோகிப்பதில் அக்கினி மந்தம், குன்மம், வாதாதி சாரம், முளை மூலம், கபதோஷம், இரத்தபேதி, காலசதி குணமாகும். ஜடராக்கினி அதிகரிக்கும்.
களிப்பிரண்டை:
பித்த தோஷம், கரப்பான், காணாக்கடி, சிலந்தி விஷம் ஆகியவை நீங்கும். வீரிய விருத்தி உண்டாகும்.
விஷ்ணுகிரந்தி:
சுரத்தினால் ஏற்பட்ட கபம், உட்சூடு, கோழை, இருமல், வாதப்பிணி ஆகியவை அகலும்.
நறுந்தாளி:
தொண்டை, மார்பு, உந்தி, மூலம் இவற்றின் புண்கள், தேக வேப்பம், பிரமேகம் இவை போகும். சுக்கிலம் உண்டாகும்.
தீம்பிரண்டை
தித்திப்பு பிரண்டையால் செரியா மந்தம், சீதபேதி, அதிகொட்டாவி, சுவாச விக்கல், சிலேஷ்ம ஆதிக்கம், வாத கோபம் ஆகியவை தீரும்.
புளிப்பிரண்டை:
உஷ்ண குணமுள்ள புளிப்பு பிரண்டையானது சரீர வெளுப்பு, மார்பு நோர், வயிற்று வலி ஆகியவற்றை விலக்கும்.
பேய்ப்பாற்சொரி:
இதன் கீரையால் அதிசாரம், உட்சூடு, இரத்த கிரகணி, பித்த தோஷம் ஆகியவை போகும்.
குதிரைவாலி:
இதனை மாமியார் கூந்தல் என்றும் கூறுவர். குதிரை வாலியால் மூலக்கடுப்பு, அதிசாரம், சுரவேகத்தால் வந்த நாவறட்சி, சகனா விருத வாதம், பிரமேகம், இருமல், கட்டி, பருவன், நேத்திர மங்கல், கோழை, அக்கினி மந்தம், வாத கப தொந்தம், தினவு ஆகியவை நீங்கும்.
பவளக்குன்றி கொடி:
செங்குன்றிற்கு வெள்ளை, இரத்த பித்தம், நமைக்கரப்பான், விரணம், சிரங்கு, சருமக்கடுவன், அழுக்குக்கரப்பான் ஆகியவை போகும்.
முசுட்டை:
வாத கோபம், கபதோஷம், பிரமேக நீர் தினவு, படை, சொறி, சிரங்கு ஆகியவற்றை நீக்கும். மலத்தை வெளிப்படுத்தும்.
பொன் முசுட்டை:
வாத வலி, மயக்கம், சீதம், நமைச்சல், உட்சூடு இவை நீங்கும். சாப்பிட ருசியாக இருக்கும்.
நஞ்சறுப்பான் பூண்டு:
இதை நஞ்சு முறிப்பான் என்று கூறுவர். நஞ்சறுப்பான் பூண்டினால் கீடசர்ப்பம் தீண்டுதலாலும், தானே நுகரலாலும், இடு மருந்தாலும், இடு பாஷணங்களாலும் வியாபித்த விஷம் போகும்.
நீர்மேல் நெருப்பு:
மகாவாத ரோகமும், இரத்த குறைவினால் பிறக்கின்ற திமிர்வாத நோயும் விலகும்.
முடக்கற்றான்:
கீல் பிடிப்பு, சினைப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தை ஒட்டிய வாதம், மலக்கட்டு ஆகியவை போகும்.
கொல்லாங்கோவை:
குடல் வலி, சரீரம் வெளிறல், பாண்டு, திரிதோஷம், அக்கிப்புண், உட்சூடு, கண்டமாலை, ஆந்திர பித்த வாதம், குஷ்டம், மகாவிஷம், கரப்பான், நமைச்சல் ஆகியவை போகும்.
கற்கோவை, வரிக்கோவை, அப்பைக்கோவை:
இனிப்புள்ள கற்கோவை சோபையையும், வரிக்கோவையானது விஷத்தையும், அப்பைக்கோவையானது மேக விரணத்தையும் நீக்கும்.
மூக்குறட்டை:
ஆமம், நமைச்சல், வாத நோய், இவற்றை நீக்கும். அழகையும், விரோசனத்தையும், பித்தப்பிணியையும் உண்டாக்கும்.
நரிப்பயற்றங் கொடி:
பித்த கோபம், கப ரோகங்கள், பிரமேக வெள்ளை, அரித்திரா மேகம், கரப்பான் ஆகியவை விலகும்.
வெள்ளை சாறடை:
விருச்சிகம் என்கிற வெண்சாறடையால் வித்திருக்கட்டி, மூல வாயு, கண்படல ரோகம், நெஞ்சு வலி, சுவாச ரோகம், கர்ப்பத்தை தடுக்கும் சூசிகா வாதம் ஆகியவை நீங்கும்.
பொன்னாங்காணி:
விழியை பற்றிய வாதகாசம், தும்பிபிர ரோகம், கிருஷ்ண மண்டல ரோகம், வாத தோஷம், தேகச்சூடு, பீலிகம், மூலரோகம் இவை போகும். உடலுக்கு பொன் நிறம் உண்டாகும்.
புனற்றண்டு:
சிலேத்ம வாந்தி, நாசியில் விழுகின்ற சலம், கரப்பான், காரணம் இல்லாமல் அடைப்பட்ட கண்டத்தொலி, பசியின் வரம்பை காட்டாத சீத சுரம், கட்டு வாதம், வாத பிரமேகம், சந்திக வாதம், சூலை, கிராந்தி இவை போகும்க்.
அம்மான் பச்சரிசி:
எரிவுண், மலபந்தம், பிரமேக கசிவு, சரீரத்தடிப்பு, நமைச்சல் ஆகியவை நீங்கும்.
சிவப்பு அம்மான் பச்சரிசி:
வாத பிரமேகம் போகும். சுக்கில தாது விருத்தியாகும். இதனால் வெள்ளி பற்பம் ஆகும்.
பொடுதலை:
சீதபேதி, இருமல், அதிசாரம், சூலை நோய், சிலேஷ்ம பிரமேகம், வாத நோய் இவை போகும். உடல் வலிமை உடையதாகும்.
கொத்தான்:
அதிக குளிர்ச்சியுள்ள கொத்தானுக்கு ஒழுக்கு பிரமேகம், மூத்திர கிரிச்சரம், பித்த நோய், அயர்ச்சி ஆகியவை நீங்கும்.
நல்ல நெருஞ்சில்:
சொட்டு மூத்திரம், சுர வெப்பம், அஸ்மரி ரோகம், நீரடைப்பு, முட வாதம், பிரமேக வெள்ளை, மூத்திர கிரிச்சரம், திரிதோஷ கோப விரணம், சுரதாகம், உஷ்ணம் இவைகளை நீக்கும்.
யானை நெருஞ்சில்:
குளிர்ச்சியையுடைய யானை நெருஞ்சிலால் வெள்ளை விழுதல், வெண் குஷ்ட ரோகம், அஸ்மாரி, அஸ்திசிராவ ரோகம், தேக எரிச்சல், உழலை, தாகம், பித்த மயக்கம் ஆகியவை தீரும்.
செம்பு நெருஞ்சில்:
திரிதோஷம், சுரம் முதலிய நோய்கள், சுக்கிலமேகம், நீடித்த உட்சூடு ஆகியவற்றை நீக்கும்.
பேய்ப்புடல்:
பித்த கப சுரங்கள், காமாலை, மசூரிகை, தாகம், தேகங்காய் பேறும் படி தள்ளுகின்ற மயக்கம் ஆகியவை தீரும்.
வல்லாரை:
பித்த ஜிக்வண்டக ரோகமும், மலக்கழிச்சலும், இரத்த கிராணியால் பிறக்கின்ற கடுப்பும் நீங்கும்.
பிரமிய வழுக்கை:
சப்தளை என்கிற பிரமிய வழுக்கைக்கு, கீல்களின் கபம் விருத்தியடைவதால் பிறந்த வலி, வீக்கம், கால் பிடிப்பு, கை, கால் எரிவு, வாதக்கடுப்பு, மலபந்தம், சோபை ஆகியவை போகும்.
கையாந்தகரை:
இதை கரிசலாங்கண்ணி என்றும் கரிசாலை என்றும் கூறுவர். கையாந்தகரையால் சுரசாந்த ரோகம், காமிலம், தோல் நோய்கள், வீக்கம், பாண்டு, தந்த ரோகம் ஆகியவை போகும். உடலுக்கு பொற்சாயலும், சிங்கததிற்கு சமமான பலமும் உண்டாகும்.
பொற்றாலை கையாந்தகரை:
உடலுக்கு பொற்சாயையும், விழிக்கு ஒளியையும், புத்திக்கு தெளிவையும் உண்டாக்கும். குன்ம கட்டியை போக்கும்.
தொட்டாற் சுருங்கி:
மேக முத்திரத்தை நீக்கும். பெண் வசியம் செய்யும். உடலில் ஓடி கட்டுகின்ற வாத தடிப்பை கரைக்கும்.
கொட்டைப்பாசி:
பிரமேகம், பித்த சுரம், தேமல், கரப்பான், கக்கிருமல், கிரந்தி, கப வாதம் இவை போகும். பசி உண்டாகும்.
கானாம் வாழை:
ஸ்தன வித்திரிதி, சுரம், இரத்த பேதி ஆகியவை போகும்.சுக்கில விருத்தியும், கப பெருக்கமும் உண்டாகும்.
சிறுபுள்ளடி:
எண் வகை மாந்தம், சீதக்கட்டு, வாத சலம் ஆகியவை நீங்கும். வற்றிய முலைப்பாலும் சுரக்கும்.
உப்பிலாங்கொடி:
குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மாந்தம், அதிசாரம், நீங்காத சுரம் ஆகியவை நீங்கும். இது தங்கத்தை பஸ்பம் ஆக்கக்கூடியது.
பம்பந்தாரா:
பிரசவ அழுக்கும், எஃகு மஸ்தம்பம் போல் தடிக்கின்ற வாத தடிப்பும், அருசியும் நீங்கும். பால் வற்றிய பெண்களுக்கு பால் சுரக்க செய்யும்.
இவை அனைத்தும் கொடி வகைகள் மற்றும் அவற்றின் குணங்கள் ஆகும். இவற்றை அறிந்து கொண்டு உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» கொடி இடைக்கான பயிற்சி.....
» சீந்தில் கொடி
» சீந்தில் கொடி
» கொடி இடைக்கான பயிற்சி.
» கொடி இடை கிடைக்க எளிய பயிற்சி
» சீந்தில் கொடி
» சீந்தில் கொடி
» கொடி இடைக்கான பயிற்சி.
» கொடி இடை கிடைக்க எளிய பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum