தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெயிட் லிப்டிங் ஸ்குவாட்ஸ் பயிற்சி

Go down

வெயிட் லிப்டிங் ஸ்குவாட்ஸ் பயிற்சி Empty வெயிட் லிப்டிங் ஸ்குவாட்ஸ் பயிற்சி

Post  amma Thu Jan 31, 2013 4:34 pm


கால்களுக்கு மட்டுமல்லாது மொத்த உடலும் ஸ்குவாட்ஸ் மூலம் பயன் பெறுகின்றது. நல்ல ஸ்டாமினா பெறுவதற்கு மட்டுமின்றி இது மிகச்சிறந்த கார்டியோ எக்ஸர்சைஸாகவும் விளங்குகின்றது. அதிகபட்ச கலோரிகள் இதன் மூலம் எரிக்கப்படுகின்றது இது மிகவும் பாதுகாப்பானது.பெரும்பாலும் எல்லோரும் இப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

இதை "கிங் ஆப் எக்ஸர்சைஸ் "(king of exercises)என்றே அழைக்கின்றனர் சாதாரணமாக நின்ற நிலையில் அமர்ந்து எழுவது ப்ரீ ஸ்குவாட் எனப்படும். squats கையில் எடையுடன் ஸ்குவாட் செய்கின்றபோது அது வெயிட் ஸ்குவாட் எனப்படும்.

அதே டம்பிள்ஸ் உதவியுடன் செய்கையில் அதை டம்பிள் ஸ்குவாட் என்றும் ஸ்மித் மெஷின் உதவியுடன் செய்கையில் அதை ஸ்மித் மெஷின் ஸ்குவாட் என்றும் அழைக்கின்றோம்.. ப்ரீ ஸ்குவாட் மிகவும் எளிதானது. அதே ஸ்மித் மெஷின் ஸ்குவாட் கண்டிப்பாக தக்க டிரெய்னர் உதவியுடன் தான் மேற்கொள்ள வேண்டும்.

மிக முக்கியமாக அதீத குண்டான மனிதர்களால் ஸ்குவாட் செய்ய இயலாது. அது அவர்களின் மூட்டு மற்றும் கால்களில் உள்ள தசையை பாதிப்பிற்குள்ளாக்கலாம். அதே போல் இதய நோயாளிகளும் இப்பயிற்சியை தவிர்க்க வேண்டும். இது அவர்களின் இதயத்திற்கு மேலும் சுமையை தரவல்லது.

எனவே இது போன்ற பிரச்சினைகள் ஏதும் இல்லாதவர்கள் இப்பயிற்சியை தங்கள் உடலினை உறுதி செய்ய பயன்படுத்தி கொள்ளலாம்... இந்த இரு பயிற்சிகளும் கால்களுக்கு வலுவை கொடுக்கும் பிரத்யேகமான பயிற்சிகளாகும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum