தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ப்ரீ ஸ்குவாட்ஸ்

Go down

ப்ரீ ஸ்குவாட்ஸ் Empty ப்ரீ ஸ்குவாட்ஸ்

Post  amma Thu Jan 31, 2013 1:55 pm


ஸ்குவாட்ஸில் இப்பயிற்சியானது கால்களுக்கு மட்டுமல்ல உடலின் கீழ்ப்பகுதி முழுமைக்கும் பயன்தரக்கூடியதாகும். கால்களில் உள்ள தசைகள் இடுப்பில் உள்ள தசைகள் முதுகுதண்டுவடம் மற்றும் கீழ் முதுகில் உள்ள அனைத்து தசைகளும் இப்பயிற்சியின் மூலம் வலுப்படும்.

ஸ்குவாட்டிங் மூலம் சில ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படுவதால் தசைகள் வளர்வதற்கும் கட்டமைப்பு பெறுவதற்கும் ஸ்குவாட்டிங் உதவுகின்றது. ஸ்குவாட்ஸில் பல விதங்கள் உள்ளன அவை.......

• ப்ரீ ஸ்குவாட்ஸ்
• வெயிட் ஸ்குவாட்ஸ்
• டம்பிள் ஸ்குவாட்ஸ்
• வெயிட் லிப்டிங் ஸ்குவாட்ஸ்+ ஸ்மித் மிஷின் ஸ்குவாட்ஸ்

கால்களுக்கு மட்டுமல்லாது மொத்த உடலும் ஸ்குவாட்ஸ் மூலம் பயன் பெறுகின்றது. நல்ல ஸ்டாமினா பெறுவதற்கு மட்டுமின்றி இது மிகச்சிறந்த கார்டியோஎக்ஸர்சைஸாகவும் விளங்குகின்றது அதிகபட்ச கலோரிகள் இதன் மூலம் எரிக்கப்படுகின்றது. இது மிகவும் பாதுகாப்பானது.பெரும்பாலும் எல்லோரும் இப்பயிற்சியை மேற்கொள்ளலாம். .

சாதாரணமாக நின்ற நிலையில் அமர்ந்து எழுவது ப்ரீ ஸ்குவாட் என்று அழைக்கப்படுகிறது. கையில் எடையுடன் ஸ்குவாட் செய்கின்றபோது அது வெயிட் ஸ்குவாட் எனப்படும். அதே டம்பிள்ஸ் உதவியுடன் செய்கையில் அதை டம்பிள் ஸ்குவாட் என்றும் ஸ்மித் மெஷின் உதவியுடன் செய்கையில் அதை ஸ்மித் மெஷின் ஸ்குவாட் என்றும் அழைக்கின்றோம்..

ப்ரீ ஸ்குவாட் மிகவும் எளிதானது. அதே ஸ்மித் மெஷின் ஸ்குவாட் கண்டிப்பாக தக்க டிரெய்னர் உதவியுடன் தான் மேற்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக அதீத குண்டான மனிதர்களால் ஸ்குவாட் செய்ய இயலாது. அது அவர்களின் மூட்டு மற்றும் கால்களில் உள்ள தசையை பாதிப்பிற்குள்ளாக்கலாம்.

அதே போல் இதய நோயாளிகளும் இப்பயிற்சியை தவிர்க்க வேண்டும் இது அவர்களின் இதயத்திற்கு மேலும் சுமையை தரவல்லது எனவே இது போன்ற பிரச்சினைகள் ஏதும் இல்லாதவர்கள் இப்பயிற்சியை தங்கள் உடலினை உறுதி செய்ய பயன்படுத்தி கொள்ளலாம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum