ஆரோக்கியத்திற்கு தேவை உடற்பயிற்சி
Page 1 of 1
ஆரோக்கியத்திற்கு தேவை உடற்பயிற்சி
வாரத்துக்கு இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்தாலே நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு போதுமானது என்ற தவறான தகவல் வெளியாகியுள்ளது. எப்படி விட்டமின்கள் நமது உடலுக்கு தினசரி தேவையோ, அதுபோல மிதமான உடற்பயிற்சியும், நம் உடலுக்கு தினசரி தேவை.
ஏனென்றால், உடற்பயிற்சிகளால் ஏற்படும் நல்ல மாற்றங்களை 48 முதல் 72 மணி நேரங்கள் வரைதான் நமது தசைகளால் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆகவே நமது தசைகளும், அவற்றுடன் தொடர்புடைய நமது இரத்த, சுவாச, செரிமான உறுப்புகளும் உறுதியாகவும், நல்ல நிலையில் இயங்க குறைந்தது வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.
மேலும் எடையைக் குறைப்பதற்கு வியர்வை வெள்ளம் போல் கொட்டும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. வியர்வையானது உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு மட்டுமே உதவும்.
அது நமது எடையைக் குறைக்க உதவாது. வேர்வை பொங்க கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடை குறைவே ஆகும். இதை விடுத்து உடல் தசைகளுக்கு கடுமையான பயிற்சி கொடுக்காமல் மிதமாக பயிற்சிக் கொடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும்
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஒல்லியானவர்களுக்கும் உடற்பயிற்சி தேவை!
» ஒல்லியானவர்களுக்கும் உடற்பயிற்சி தேவை!
» உடல் சுறுசுறுப்புக்கு உடற்பயிற்சி தேவை!
» உடற்பயிற்சி அவசியம் தேவை
» எல்லோருக்கும் தேவை! உடற்பயிற்சி
» ஒல்லியானவர்களுக்கும் உடற்பயிற்சி தேவை!
» உடல் சுறுசுறுப்புக்கு உடற்பயிற்சி தேவை!
» உடற்பயிற்சி அவசியம் தேவை
» எல்லோருக்கும் தேவை! உடற்பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum