உடற்பயிற்சி அவசியம் தேவை
Page 1 of 1
உடற்பயிற்சி அவசியம் தேவை
நம்மில் பெரும்பான்மையோர் நடைமுறை வாழ்க்கையில் குனிந்தும், நிமிர்ந்தும், நடந்தும் செயல்படுகிறோம் என்றாலும் இதுவே முழுமையான உடற்பயிற்சி ஆகி விடாது. உடல் நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு விரைந்தும் தொடர்ந்தும் செய்யப்படும் பயிற்சிகளினால் தான் உடல் திறனும் செயல்திறனும் கூடுகிறது.
உடல் நலனை காக்கும் வகையில் நாம் செய்கின்ற உடற்பயிற்சிகள் நமது உடலின் சக்தியையும், திறத்தையும் மேம்படுத்தி, நீடித்துழைக்கும் ஆற்றலைத் தந்து, வேலைப்பளுவையும் உடல் நோயையும் தாங்கிப் பொறுத்துக் கொள்ளும் பொறுமையையும் தருவதாக அமைய வேண்டும்.
உடல்நலத்தை உயர்த்த வேண்டிச் செய்யப்படுகின்ற பயிற்சிகள் இளம் வயதிலேயே தொடங்குவது தான் மிகவும் சிறந்தது. ஒவ்வொருவரும் தங்களது வயதுக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்றவாறு உடற்பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளாமல் சைக்கிள் விடுதல், நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சிகள் போன்றவற்றில் ஈடுபடலாம். அதே நேரத்தில் வயதின் காரணமாக உடற்பயிற்சியை ஒதுக்குவதும் உடல் நலனுக்கு நல்லதல்ல.
இதயக்கோளாறு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை உடற்பயிற்சியின் மூலம் வராமல் காக்கவும், அப்படியே வந்தால் அவற்றைக் கட்டுப்படுத்தவும் உடற்பயிற்சியினால் மட்டுமே இயலும். உடற்பயிற்சிக்கும் மனநலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள் உடல் நலத்துடன் மனநலமும் அமையப் பெறுகின்றனர். எனவே இன்றே, இப்போதே உங்களுக்கென்று ஒரு பயிற்சித் திட்டத்தை வகுத்துக் கொண்டு செயல்படத் தொடங்குங்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடற்பயிற்சி அவசியம்
» ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம்.
» ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம்.
» உடல் சுறுசுறுப்புக்கு உடற்பயிற்சி தேவை!
» எல்லோருக்கும் தேவை! உடற்பயிற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum