இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
Page 1 of 1
இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
இடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் 'சப்ஜடேனியஸ்' எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் தங்கி, இடுப்புச் சதைப் பகுதி பெருத்துப் போவதற்குக் காரணமாகிவிடுகிறது. இதைத்தவிர, மரபு ரீதியாகவும் இடுப்பு பருமன் ஏற்பட வாய்ப்பு உண்டு.
பிரசவத்துக்குப் பிறகு, சில பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாற்றங்களாலும் தடதடவென இடுப்பில் சதை போட்டுவிடும். சிறிது கவனம் எடுத்துக் கொண்டாலே போதும்... இந்தப் பிரச் னைக்கு முடிவு கட்டிவிடலாம் ஒரு சேரில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் உடலை நிறுத்திக்கொண்டு, இரண்டு கைகளையும் நேராக நீட்டியபடி, எழுந்து எழுந்து உட்காரவும்.
இந்தப் பயிற்சி, கொழுப்பைக் கரைய வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும். தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, இடது காலை மட்டும் மடக்கி, அப்படியே வலது பக்கமாக சாய்ந்து படுக்கவும். சில விநாடிகள் கழித்து, மடக்கிய காலை நீட்டி, வலது காலை மடக்கவும்.
இப்படி ஐந்து தடவை செய்த பிறகு, இரண்டு கால்களையும் மடக்கியபடியே இடதுபக்கமாக சாய்ந்து படுத்து, முன்பு செய்தது போலவே ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி மடக்கவும். இதையும் ஐந்து தடவை செய்யவும். இப்படி தினமும் செய்வதால், இடுப்பின் அமைப்பு கட்டுக்கோப்பாக இருக்கும்
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» தொந்தி குறைய எளிய பயிற்சி
» தொப்பை குறைய எளிய பயிற்சி
» இடுப்பு வனப்பு பெற பயிற்சி
» இடுப்பு வனப்பு பெற பயிற்சி
» இடுப்பு மற்றும் கால்களுக்கான லஞ்சஸ் பயிற்சி
» தொப்பை குறைய எளிய பயிற்சி
» இடுப்பு வனப்பு பெற பயிற்சி
» இடுப்பு வனப்பு பெற பயிற்சி
» இடுப்பு மற்றும் கால்களுக்கான லஞ்சஸ் பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum