இடுப்பு மற்றும் கால்களுக்கான லஞ்சஸ் பயிற்சி
Page 1 of 1
இடுப்பு மற்றும் கால்களுக்கான லஞ்சஸ் பயிற்சி
லஞ்சஸ் (Lunges) இடுப்பு மற்றும் கால்களுக்கான பிரத்யேக பயிற்சி என கூறலாம் .இது கால்களை நன்கு உறுதி செய்யும். கால்களில் உள்ள முக்கிய தசைகள் அனைத்தும் இதனால் பயன் பெறும். அதிக கலோரிகள் இப்பயிற்சியில் வெகு சுலபமாக செலவழியும்.
இப்பயிற்சிக்கு அதிக இடவசதி தேவையில்லை. சில டம்பெல்ஸ் கொஞ்சம் இடவசதி இருந்தால் மட்டும் போதும். கால்களை முதலில் தோளின் அகலத்திற்கு அளவாய் வைக்கவேண்டும். பின் ஒரு காலை முன்னோக்கி வைத்து காலை 90 * டிகிரி அளவு மடித்துக்கொண்டு அமர்ந்து எழ வேண்டும்.
10 முறை உட்கார்ந்து எழுந்துவிட்டு கால் மாற்றி செய்ய வேண்டும். இதை லஞ்சஸ் என கூறுகின்றோம். இதை டம்பெல்ஸை உபயோகித்தும் செய்யலாம். லஞ்சஸ் கையில் பார்பெல்ஸ் அல்லது டம்பெல்ஸ்ஸை உபயோகித்து செய்கையில் பலவித நிலைகளில் மேற்கொள்ளலாம். ரிவர்ஸ் லஞ்சஸ், டம்பெல்ஸை தோளில் வைத்து கொண்டும் அமர்ந்து எழுதல் என பல நிலைகளில் மேற்கொள்ளலாம்.
ஆனால் முதலில் குறைவான எடைகளில் ஆரம்பித்து பின் எடையை அதிகமாக்கி கொள்ளுதல் நலம் பயக்கும்..இப்பயிற்சி நல்ல தசை இறுக்கத்தை தந்து கால்களுக்கு அழகான கட்டமைப்பை தரும் ஓட்டப்பந்தய வீரர்கள் அதிக அளவில் இப்பயிற்சியை மேற்கொள்கின்றனர்.
ஓடும் போதும் குதிக்கும் போதும் ஏற்படும் தசை இழப்பை திரும்ப பெற்று தசைகள் வளரவும் கட்டமைப்பை பெறவும் இது வழி வகுக்குன்றது.. ஆனால் இப்பயிற்சியை சரியான முறையில் செய்யாவிட்டால் இது கண்டிப்பாக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே முறையாக பயிற்சி பெற்ற பயிற்சியாளரிடமே இந்த உடற்பயிற்சியை பெற வேண்டும்
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» கால்களுக்கான எளிய பயிற்சி
» கால்களுக்கான பயிற்சி
» இடுப்பு வனப்பு பெற பயிற்சி
» அழகான கால்களுக்கான பயிற்சி...
» இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
» கால்களுக்கான பயிற்சி
» இடுப்பு வனப்பு பெற பயிற்சி
» அழகான கால்களுக்கான பயிற்சி...
» இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum