திருமண தடை நீங்கும்
Page 1 of 1
திருமண தடை நீங்கும்
சேலம் அம்மாப்பேட்டையில் 200 ஆண்டுகள் புகழ்பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. சைவ காளியம்மன் கோவிலான இங்கு தினமும் பெண்கள் அதிகளவில் வந்து அம்மனை மனம் உருகி வேண்டிகொள்கிறார்கள். குறிப்பாக செவ்வாய்க்கிழமை, மற்றும் வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் தான் அதிகளவில் கூட்டம் இருக்கிறது.
இங்கு இயற்கையாகவே அரசு-வேம்பு மரம் உள்ளது. 9 கிளைகளுடன் உள்ள இந்த மரம் நவக்கிரகங்களை குறிக்கிறது. மரத்தை சுற்றியும் நாகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இதை சுற்றி வந்தால் நாக தோஷம் நிவர்த்தியடையும். இதன் அருகே எங்கும் இல்லாத வகையில் 7 சப்தகன்னிகளின் சிலைகளும் ஒரே இடத்தில் அமையபெற்றுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு ஒரு டன் எடையுள்ள ஒரு கல்லால் இந்த 7 சப்த கன்னிகளின் சிலையும் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் இந்த சப்த கன்னியை வழிப்பட்டு வருகிறார்கள். ராகு காலமான செவ்வாய்க்கிழமையில் மாலை 3-30 மணி முதல் 4-30 மணி வரையும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4-30 மணி முதல் 6 மணிவரையும் சிறப்பு பால்அபிஷேகம் பூஜைகள் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் ஏராளமான பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் குறைந்தது 3 வாரம் முதல் அதிகபட்சமாக 51 வாரங்கள் வரை கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி பயன்அடைகிறார்கள்.
வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில் இங்கு 7 சப்த கன்னிகளும் ஒரே இடத்தில் அமையபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சப்த கன்னிகளுக்கு முன்பு ஆலமரத்தடியில் பிரார்த்தனை பீடம் அமையபெற்றுள்ளது. இதில் பெண்கள் தங்களின் நீண்ட நாள் விருப்பத்தை எழுதி பேப்பரில் கட்டி மாலையாக போட்டு செல்கிறார்கள்.
இதனால் தங்கள் விருப்பம் நிறைவேற்றபடும் என்று அவர்கள் நம்பிக்கையாக செல்கிறார்கள். சப்த கன்னிகள் பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டேஸ்வரி, ஆகியோருக்கு தினமும் இந்த கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
திருமணம் ஆகாத பெண்கள் இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து ராகு கால பூஜையில் கலந்து கொள்கிறார்கள். இந்த கோவிலுக்கு சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அடிக்கடி டவுன் பஸ்கள், மற்றும் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கோவில் செல் போன் எண்-9500550731 ஆகும். இதே போல் சேலம் சுகவனேஸ்வரர் கோவிலிலும், சப்த கன்னிகள் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆனால் தனிதனியாக அமையபெற்றுள்ளது. இங்கேயும் ராகுகால பூஜையில் திருமணம் ஆகாத பெண்கள் கலந்து கொண்டு பரிகார பூஜை செய்து வருகிறார்கள்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» திருமண தடை நீங்கும்
» பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் வழிபாடு
» திருமண தடை நீங்கும் திருவெண்காடு முக்குளத் தீர்த்தம்
» மரண பயம் நீங்கும்
» தோஷம் நீங்கும் இறை வழிபாடு
» பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் வழிபாடு
» திருமண தடை நீங்கும் திருவெண்காடு முக்குளத் தீர்த்தம்
» மரண பயம் நீங்கும்
» தோஷம் நீங்கும் இறை வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum