மோர்க் களி மோர்க் களி
Page 1 of 1
மோர்க் களி மோர்க் களி
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
புளித்த மோர் - 1 கப்
எண்ணெய் - 12 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
மோர் மிளகாய் - 4
இஞ்சி விழுது - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* அரிசி மாவில் புளித்த மோரை கொட்டி, உப்பை போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
* அடிகனமான வாணலி அல்லது நான்-ஸ்டிக் தவாவில் 6 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு வெடிக்கவிட்டு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சிவக்க வறுக்கவும்.
* இப்போது இஞ்சி விழுது, மோர் மிளகாய் சேர்த்து சிறிது வதக்கவும்.
* தொடர்ந்து மோரில் கரைத்து வைத்துள்ள அரிசி மாவை ஊற்றி, நன்கு கிளறி மாவு வெந்து பளபளவென வருகையில் மேலும் மீதமுள்ள எண்ணெய் விட்டு நன்கு கிளறவும்.
* ஒரு தட்டில் சிறிது எண்ணெய் தடவி கிரீஸ் செய்து, அதில் வெந்த மோர்க்களியைப் போட்டு எண்ணெய் தடவிய கத்தியினால் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.
குறிப்பு
* எண்ணெய் பூசிய சிறிய கோப்பைகளில் மோர்க்களியை போட்டு கூம்பாகக் கவிழ்த்தால் அழகிய கப் வடிவுடன் மோர்க்களி பார்ப்பவரை ஈர்த்து சாப்பிட வைக்கும்.
* தினம் மீந்து போகும் சிறிதளவு மோரை 4 அல்லது 5 நாட்கள் சேர்த்து வைத்து அந்த புளித்த மோரை உபயோகித்தும் மோர்க்களி செய்யலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum