புதினா சோறு புதினா சோறு
Page 1 of 1
புதினா சோறு புதினா சோறு
தேவையான பொருட்கள்:
உதிரியாக வடித்த சோறு - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
கடுகு - 1/ 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/ 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/ 2 கப்
எண்ணெய் - 2 ஸ்பூன்
நெய்- 2 ஸ்பூன்
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 4
புதினா, கொத்தமல்லி தழை - 1 கப்
செய்முறை:
* புதினா, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், பூண்டு, தேங்காய் துருவல் ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
* வாணலியில் நெய், எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகத்தைப் போட்டு தாளிக்கவும்.
* பின்னர் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும்.
* பின்னர் அரைத்த விழுது, சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
* நன்கு வதங்கிய பின்னர் சோற்றைச் சேர்த்து கிளறி இறக்கவும்.
* இதே சுவையான, ஆரோக்கியமான புதினா சோறு ரெடி.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum