புதினா வடை
Page 1 of 1
புதினா வடை
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- உளுத்தம் பருப்பு – 1 கப்
- புதினா (பொடியாக நறுக்கியது) – 1/2 கப்
- மிளகு – 2 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
- நல்லெண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
- உளுத்தம் பருப்பை 1 முதல் 2 மணி நேரம் ஊறவைத்து, நன்றாகக் கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- மிளகு, சீரகத்தை கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
- அரைத்த மாவில், மிளகு, சீரகப் பொடி, நறுக்கியப் புதினா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசையவும்.
- எண்ணையை ஒரு வாணலியில் ஊற்றி காய வைக்கவும். எண்ணை காய்ந்ததும்,
எலுமிச்சம் பழ அளவு மாவை வடையாகத் தட்டி நடுவில் துளையிட்டு, எண்ணையில்
போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum