தினமும் ஜாக்கிங் செய்யலாமா?
Page 1 of 1
தினமும் ஜாக்கிங் செய்யலாமா?
ஜாக்கிங்கைத்தைத் துவக்குவதற்கு முன்னர் உங்கள் மலக்குடல் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். மலச்சிக்கலானது உங்கள் ஜாக்கிங்கை பாதிக்கக் கூடும். காலைப்பொழுதில் ஜாக்கிங்கை துவக்குவதற்கு முன்னர் வெதுவெதுப்பான ஒரு தம்ளர் நீரில் சிறிது எலுமிச்சை சாறும் ஒரு கரண்டி தூய்மையான தேனும் கலந்து பருகுவது மிகவும் சிறந்த முறையாகும்.
இவ்வாறு பருகுவது ஜாக்கிங்கின் பொழுது உடலிலிருந்து வெளிவரும் பலவகையான உப்புகளின் இழப்பையும் நீரின் இழப்பையும் ஈடு செய்யும். ஜாக்கிங்கை தொடக்கத்தில் அரை கிலோ மீட்டர் தூரம் ஓடிப் பழகிக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் ஆற்றல் அளவு இவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிறிதாக ஓடும் தூரத்தை அதிகப்படுத்துங்கள்.
நடுத்தர வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு 5 கிலோ மீட்டருக்கு மேல் ஓடுவது உடல் நலத்திற்கு உகந்ததல்ல. அன்றாடம் ஓடுவது என்பது உடலுக்கு மிகுந்த களைப்பைத் தரக் கூடும். எனவே ஒரு நாள் விட்டு ஒரு நாள் விட்டு ஒருநாள் ஓடுவது மிகவும் சிறந்த முறையாகும்.
ஓய்வு நாட்களில் நீங்கள் இழந்த ஆற்றலைத் திரும்பப் பெற முடியும். அன்றாடம் 8 கிலோ மீட்டர் தூரம் ஓடும் அளவிற்கு உங்கள் உடல் நிலையானது தயாராகி விட்டால், வாரத்தில் 5 நாட்கள் மட்டும் ஓடினால் போதுமானது.
மேலும் நீங்கள் 10 கிலோ மீட்டர் தூரம் அன்றாடம் ஓடும் திறன் பெற்றால், வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் ஓடினால் மோதும். நீங்கள் இளம் வயதினராக இருந்தால், வாரத்திற்கு 4 முறை 12 முதல் 15 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடலாம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஜாக்கிங் என்பது ஒரு எளிய உடற்பயிற்சி!!
» இதய தாக்கத்தைத் தடுக்கும் ஜாக்கிங்
» இரத்ததானம் செய்யலாமா???
» ஜாக்கிங் செய்யும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
» ஜாக்கிங் செய்ய ஏற்ற நேரம்
» இதய தாக்கத்தைத் தடுக்கும் ஜாக்கிங்
» இரத்ததானம் செய்யலாமா???
» ஜாக்கிங் செய்யும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
» ஜாக்கிங் செய்ய ஏற்ற நேரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum