கால்களுக்கான பயிற்சி
Page 1 of 1
கால்களுக்கான பயிற்சி
முதலில் நேராக நிமிர்ந்து நிற்கவும். பிறகு குதிக்காலை மட்டும் உயர்த்தவும். பின்னர் இரு கைகயையும் மார்புக்கு நேராக விறைப்பாக நீட்டவும். பிறகு சுவாசத்தை மெதுவாக உள்ளுக்கு இழுத்து அடக்கிக் கொண்டு உட்கார வேண்டும். அப்படி உட்காரும் போது நீட்டிய கரங்களை தலைக்கு மேல் உயர்த்த வேண்டும்.
பிறகு எழுந்து முதல் நிலைக்கு வந்த பின் சுவாசத்தை வெளியில் விட்டு ரிலாக்ஸ் ஆகவும். குதிகால் உயர்த்திய படியே இருக்கட்டும். இப்போது கைகள் பழையபடி மார்ப்புக்கு நேராக நீட்டியபடி இருக்கும். பிறகு மீண்டும் உள்ளுக்கு இழுத்து கொண்டு உட்கார வேண்டும்.
பழையபடியே உட்காரும் போது தலைக்கு மேலே உயர்த்தவும். பிறகு பழைய படி எழுந்து மூச்சை விட்டு ரிலாக்ஸ் செய்யவும். இப்படியே பத்திலிருந்து இருபது தடவைகள் செய்யவும். ஒரு வாரத்திற்கு பிறகு இரண்டிரண்டாக எண்ணிக்கையை கூட்டவும்.
அவரவர் பலத்தை பொறுத்து 100கூட செய்யலாம். உட்கார்ந்து எழும்பொழுது குதிகால் உயர்த்தியே இருக்க வேண்டும். இந்த உடற்பயிற்சி செய்வதால் கண்டத்தசை, கைகளின் தசை நார், நரம்புகள் முதலியன நன்கு முறுக்கேறும். உடலில் இரத்த ஓட்டம் நன்றாக பரவி சுறுசுறுப்பை உண்டு பண்ணுகிறது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» இடுப்பு மற்றும் கால்களுக்கான லஞ்சஸ் பயிற்சி
» அழகான கால்களுக்கான பயிற்சி...
» நடை பயிற்சி
» கால்களுக்கான எளிய பயிற்சி
» கால்களுக்கான யோகா பயிற்சி
» அழகான கால்களுக்கான பயிற்சி...
» நடை பயிற்சி
» கால்களுக்கான எளிய பயிற்சி
» கால்களுக்கான யோகா பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum