உடற்பயிற்சியின் அவசியம்
Page 1 of 1
உடற்பயிற்சியின் அவசியம்
நாம் எமது அன்றாட வாழ்வில் அவசியமாக செய்ய வேண்டியது உடற்பயிற்சி. உடற்பயிற்சியானது நம்மை உறுதியானவர்களாகவும் ஆரோக்கியமானவர்களாகவும் வைத்திருக்கின்றது. மனதை எந்தவித சஞ்சலங்களுமின்றி இலகுவாக வைத்திருக்க உடற்பயிற்சி உதவும்;. இவையெல்லாவற்றையும்விட எமது உடலை ஒரு கட்டுக்கோப்புடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல் என்றும் இளமையாகவும் வைக்கின்றது.
சர்க்கரை நோய், உயர் குருதி அழுத்தம், கொலஸ்ட்ரோல் பிரச்சினை, தொந்தி வளர்ச்சி போன்றவற்றை கட்டுப்படுத்த முறையான உடற்பயிற்சியின்றியும் முறையான உணவு பழக்கமும் உதவும். உடற்பயிற்சி என்றாலே உடலை வருத்தக் கூடியது என்று எண்ணுபவர்கள்தான் அதிகம்.
ஆனால், நாளாந்த வாழ்வில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் இருக்கின்றன. இவை தலையில் ஆரம்பித்து பாதத்தில் வந்து முடிக்க வேண்டிய முறையான உடற்பயிற்சிகள். இத்தகைய பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் உடல் ஒரு கட்டுக்கோப்புடன் இருப்பதுடன் நாள்தோறும் சுறுசுறுப்புடன் இயங்கலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கும் அவை மிகவும் உதவும். தினமும் உடற்பயிற்சி செய்து முடிந்தவுடன் 5 நிமிடம் தரையில் அமர்ந்து தியானம் செய்யலாம். தியானமானது மனதிற்கு அமைதியை தருவதுடன் கோபம் போன்ற உணர்வுகளை கட்டுப்படுத்தி எம்மை சாந்தமாக இயங்கச் செய்கிறது. எப்போதும் எமது முகம் பிரகாசமாக இருக்க தியானம் என்பது அவசியம்.
உடற்பயிற்சி இருந்தால் மட்டும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ள முடியாது. அதிகமான எண்ணைய் நிறைந்த உணவுகள் உடலில் கொழுப்பு அதிகமாகுவதற்கு உதவுவதுடன் முகத்தில் அதிகமான பருக்கள் தோன்றுவதற்கும் காரணியாக அமைந்துவிடுகிறது.
மலச்சிக்கல் வராத வகையில் உணவில் நார்த்தன்மையான பொருட்களை தினமும் உட்கொள்ள தவறக்கூடாது. இதைவிட நாளாந்த வாழ்வில் அதிகமான நீரை அருந்துவதற்கு உங்களைப்பழக்கிக் கொள்ளுங்கள்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» உடற்பயிற்சியின் அவசியம்
» உடற்பயிற்சியின் அவசியம்.
» உடற்பயிற்சியின் அவசியம்
» உடற்பயிற்சியின் அவசியம்
» உடற்பயிற்சியின் பயன்பாடுகள்
» உடற்பயிற்சியின் அவசியம்.
» உடற்பயிற்சியின் அவசியம்
» உடற்பயிற்சியின் அவசியம்
» உடற்பயிற்சியின் பயன்பாடுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum