வெஜிடபிள் சப்பாத்தி வெஜிடபிள் சப்பாத்தி
Page 1 of 1
வெஜிடபிள் சப்பாத்தி வெஜிடபிள் சப்பாத்தி
தேவையான பொருட்கள்
சப்பாத்திக்கு தேவையானவை
கோதுமை மாவு – 2 கப்
உப்பு – 1/2 தேக்கரண்டி
ஸ்டப் செய்ய தேவையானவை:
காய்கறிகள்( பீன்ஸ், கேரட்) விருப்பத்திற்கேற்ப – 1 கப்
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – 1/2 கப்
இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
புதினா, மல்லித்தழை அரைத்தது – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சம்பழச் சாறு – 1 மேசைக்கரண்டி
செய்முறை:
* காய்கறிகளை அளவான தண்ணீரில் உப்பு சேர்த்து, வேகவைத்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதுகள் எல்லாவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.
* அதனுடன், மசித்த உருளைக்கிழங்கு, மசித்த காய்கறி கலவை, எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
* கோதுமை மாவை உப்பு சேர்த்துப் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்..
* பிசைந்த மாவிலிருந்து, மெல்லிய சப்பாத்திகள் திரட்டி, இரு சப்பாத்திகளுக்கு நடுவே காய்கறி கலவையைப் பரப்பி, ஓரங்களை ஒட்டிக் கொள்ளவும்.
* சப்பாத்திக் கல்லை சூடு செய்து, ஸ்டப் செய்த சப்பாத்தியைப் போட்டு எண்ணெய் சுற்றிலும் போட்டு இரு பக்கமும் திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கவும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வெஜிடபிள் சப்பாத்தி
» வெஜிடபிள் சப்பாத்தி
» வெஜிடபிள் சப்பாத்தி
» வெஜிடபிள் சப்பாத்தி
» வெஜிடபிள் சப்பாத்தி
» வெஜிடபிள் சப்பாத்தி
» வெஜிடபிள் சப்பாத்தி
» வெஜிடபிள் சப்பாத்தி
» வெஜிடபிள் சப்பாத்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum