காஞ்சி காமாட்சியுடன் வீற்றிருக்கும் கன்னிமார்
Page 1 of 1
காஞ்சி காமாட்சியுடன் வீற்றிருக்கும் கன்னிமார்
திருச்சி மாவட்டம் முசிறி காவிரிக்கரையின் எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது கன்னிமார் காமாட்சியம்மன் கோவில். சுமார் 1,000 ஆண்டு களுக்கு முன்பு கோவிலின் தென்புறத்தில் ஓடிய காவிரி ஆறு வறண்டு கிடந்தது. அப்போது அங்கு மண்ணில் புதைந்த நிலையில் கன்னிமாராகிய பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி, ருத்ரணி, கவுமாரி, சாமுண்டி ஆகிய 7 பேரின் சிலைகள் தென்பட்டன.
இதைக்கண்ட மணல் அள்ளி யவர்கள் அந்த சிலைகளை மேடான இடத்தில் வைத்து பூஜைகள் செய்தனர். கிராமமக்கள் தங்கள் குறைகளை கன்னிமார்களிடம் தெரிவித்து வேண்டினர். கன்னிமார்களும் அவர்களது குறைகளை நீக்கி அருள் புரிந்தனர். நாளடைவில் அவர்களுக்கு கோவில் கட்டப்பட்டு வழிபாடுகள் நடந்தன.
இதற்கிடையே திருச்சியில் காமாட்சிக்கு கோவில் கட்ட விரும்பிய பக்தர்கள் காஞ்சி சென்றனர். அங்கு ஐம்பொன்னால் ஆன காமாட்சி திருவுருவ சிலை செய்தனர். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் பல நாட்கள் பூஜை செய்து அம்மனின் சாந்நித்தியத்தை அந்த சிலைக்குள் ஏற்றினர். பின்னர் அங்கிருந்து திருச்சிக்கு சிலையுடன் புறப்பட்டனர்.
வழியில் முசிறி வந்ததும் களைப்படைந்த அவர்கள் காவிரியில் நீராட சென்றனர். முன்னதாக காமாட்சி சிலையை அருகிலுள்ள கன்னிமார் கோவிலில் வைத்துவிட்டு சென்றனர். நீராடிவிட்டு வந்தபிறகு காமாட்சிக்கு அங்கேயே உச்சிக்கால பூஜை செய்தனர். சிறிது நேர ஓய்வுக்கு பிறகு அந்த சிலையை எடுக்க முயன்றபோது முடியவில்லை.
அப்போது அங்கிருந்த மூதாட்டி ஒருவருக்கு அருள் வந்து, இந்த இடம் எனக்கு பிடித்திருக்கிறது, நான் இங் கேயே இருக்கிறேன், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து வழிபடுங்கள், நீங்கள் கேட்கும் வரத்தை தருகிறேன் என்றார். அன்றி லிருந்து காமாட்சி இங்கேயே எழுந்தருளி அருள்பாலிக்கிறாள்.
தற்போது இந்தகோவில் விஸ்தரிக்கப்பட்டு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு குறை தீர்க்கும் ஆலயமாக இருந்து வருகிறது. கோவிலுக்கு தென்பகுதியில் உள்ள வன்னி மரத்திற்கு அருகில் ஆதிகன்னிமார்கள் 7 பேரும் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் காவிரி நதியில் புதைந்து காணப்பட்டவர்கள் தற்போது மூலஸ்தானத்தில் அருள்புரிகிறார்கள்.
இங்குள்ள கன்னிமார்களை வழிபடுவதால் திருமண தடைகள் நீங்கும். சுமங்கலிகள் நீடுழி வாழ்வார்கள். காஞ்சி காமாட்சியின் அருளோடு செல்வ வளத்தையும் கன்னிமார் வழங்கி வருகின்றனர். கோவிலின் வடக்கு பகுதியில் காத்தவராயன், மதுரை வீரன், மாசி பெரியண்ணசாமி ஆகியோருக்கு தனி சன்னிதி உள்ளது.
மண்டபத்தின் நடுவில் மார்த்தாங்கி, ஹோத்து ராஜா, வருஷ உடையார், பரசுராமன், சிறிய வடிவில் பெருமாள், ஆஞ்சநேயர் உள்ளனர். சபா மண்டபத்தில் கன்னி மூலையில் விநாயகர், வலதுபுறம் எல்லை அம்மன், முருகப்பெருமான், அர்த்த மண்டபத்தின் தென்மேற்கு பகுதியில் காஞ்சி காமாட்சி 3 அடி உயர ஐம்பொன் சிலையாக வீற்றிருக்கிறார்கள். மூலஸ்தானத்தில் கன்னிமார் 7 பேரும் சிறிய வடிவில் வரிசையாக கொலுவிருக்கிறார்கள்.
கன்னிமார் 7 பேரின் சுதை சிற்பங்கள் அழகுற அமைந்துள்ளன. இக்கோவிலின் தீர்த்தம் காவிரி. தலவிருட்சம் வேம்பு- வன்னி. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ள முசிறியை அடைந்து, பின்னர் அங்கிருந்து முசிறி கைகாட்டி என்ற இடத்திலிருந்து 1 கி.மீ. தூரம் சென்றால் கன்னிமார் கோவிலை அடையலாம்.*
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» காஞ்சி காமாட்சியுடன் வீற்றிருக்கும் கன்னிமார்
» சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தில் கன்னிமார் கோவில்
» படகு விபத்தை தடுக்கும் கன்னிமார் வழிபாடு
» திருமணம் விரைவாக நடைபெற கன்னிமார் வழிபாடு
» படகு விபத்தை தடுக்கும் கன்னிமார் வழிபாடு
» சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தில் கன்னிமார் கோவில்
» படகு விபத்தை தடுக்கும் கன்னிமார் வழிபாடு
» திருமணம் விரைவாக நடைபெற கன்னிமார் வழிபாடு
» படகு விபத்தை தடுக்கும் கன்னிமார் வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum