படகு விபத்தை தடுக்கும் கன்னிமார் வழிபாடு
Page 1 of 1

நவ கன்னி தெய்வ வழிபாடு என்பது நம் தொன்று தொட்ட வழிபாடாக திகழ்கிறது. ஈரோடு மாவட்டத்திலும் கன்னிமார் வழிபாடு பிரசித்திபெற்று விளங்குகிறது. பல அம்மன் கோவில்களிலும் நவ கன்னியர் சிலைகள் வைக்கப்பட்டு விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. நவகன்னிகளும் நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் தெய்வமாக கருதப்படுகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்துள்ள நெருஞ்சிப்பேட்டையில் காவிரி ஆற்றின் படகுத்துறை செயல்பட்டு வருகிறது. இதனை ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நெருஞ்சிப்பேட்டை காவிரி ஆற்றின் நடுவே கன்னிமார் திட்டு என்ற ஓருஇடம் உள்ளது.
அதில் கற்பாறையில் கன்னிமார் தோற்றம் புடைப்பு சிற்பமாக உள்ளது. அங்கு ஆடிமாதம் வெள்ளிக்கிழமை படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது. அப்போது ஆற்றில் தண்ணீர் குறைவாக இருப்பதால் கன்னிமார் பாறை தெளிவாக தெரியும்.
மற்ற காலகட்டங்களில் அந்த பாறையில் பறவைகள் அதிகமாக உட்கார்ந்து இளைப்பாறுவதை காணமுடியும். இங்கு ஆடிமாதம் பொங்கல் வழிபாடு செய்வதன் மூலம் படகு விபத்து வராமல் நவகன்னிகள் காப்பதாக நம்பிக்கை உள்ளது என்றும், மேலும் நீண்ட நாள் திருமணமாகாத கன்னிபெண்களுக்கு வாங்கப்பட்ட புதிய ஜாக்கெட் துணிகளை கன்னிமார் பாறையில் வைத்து வழிபடுவார்கள்.
பின்னர் அதனை தைத்து அணிந்து கொண்டால் கன்னி பெண்களுக்கு விரைவில் திருமணமாகிவிடும் என்றும், கன்னிமார் அனைவருக்கும் குலதெய்வம் ஆவார்கள் என்றும் நெருஞ்சிப்பேட்டையில் படகோட்டும் தொழில் செய்துவரும் படகு உரிமையாளர் மணி என்பவர் தெரிவித்தார்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» படகு விபத்தை தடுக்கும் கன்னிமார் வழிபாடு
» திருமணம் விரைவாக நடைபெற கன்னிமார் வழிபாடு
» சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தில் கன்னிமார் கோவில்
» காஞ்சி காமாட்சியுடன் வீற்றிருக்கும் கன்னிமார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum