தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தில் கன்னிமார் கோவில்

Go down

சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தில் கன்னிமார் கோவில் Empty சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தில் கன்னிமார் கோவில்

Post  amma Sun Jan 13, 2013 2:06 pm

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உடையாப்பட்டி உள்ளது. இங்கு இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் ஓம்ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் ஸ்ரீமத் ஸத்குரு சாந்தானந்த சாமிகள் சமாதி (அதிஷ்டானம்) உள்ளது. இங்கு கன்னிமார் ஓடையும் உள்ளது. இந்த ஓடையில் கன்னிமார் அம்மன் கோவில் உள்ளது. கன்னிமார் அம்மன் அருகே 7 சப்த கன்னிகள் உள்ளனர்.

முன்பு 7 கற்கள் வைக்கப்பட்டு அவை சப்த கன்னிகள் என்று அழைக்கப்பட்டனர். 10 ஆண்டுக்கு முன்பு ஒரே கல்லில் சப்த கன்னிகள் சிலைகள் செதுக்கப்பட்டு கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்யப்பட்டது. பிராமி, மாகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, அம்பிளி, சிவதுதி ஆகிய 7 கன்னிமார்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள்.

இவர்களை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்று ஸ்காந்தாஸ்ரம கோவிலில் பூஜை செய்யும் நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த கணபதிராம் சாஸ்திரிகள் கூறினார். கன்னிமார் ஓடையில் நீர் வடக்கு நோக்கி பாய்வதால் இந்த ஓடையை உத்திரவாகினி என்று அழைப்பார்கள்.

அந்த ஓடையில் நின்று பக்தர்களை காக்கும் அம்மனாக கன்னிமார் அம்மன் இருப்பதாகவும் , பல நூறு தலைமுறைகளுக்கு முன்பே இந்த கன்னிமார் அம்மன் தோன்றியதாகவும் அவர் கூறினார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum