உடலையும், மனதையும் இதமாக்கும் உடற்பயிற்சி
Page 1 of 1
உடலையும், மனதையும் இதமாக்கும் உடற்பயிற்சி
* தினம் தினம் உடலில் சேரும் கலோரியை, ஒரு மணி நேரம் முறையான உடற்பயிற்சி செய்வதால் குறைக்க முடியும். உடற்பயிற்சி புத்துணர்ச்சியைத் தரும். மூளை செயல்பாட்டுக்கு உதவும். நரம்பு மண்டலத்தைச் சீராக வைத்திருக்க உதவும். கூடவே, தியானம் பழகுவது மனம் ஒருநிலைப்படுவதற்கும், மன அழுத்தத்தை விரட்டுவதற்கும் உதவும்.
* பருமன் - இது தடுக்கப்பட வேண்டிய ஒரு நோய்’ என்கிறார்கள் மருத்துவர்கள். கடந்த 40 ஆண்டுகளில் உலக அளவில் இருமடங்காக ஆகியிருக்கிறது இந்தப் பிரச்னை. குறைவாக சாப்பிட்டும் பசியாலும் இறக்கிறவர்களைவிட, அதிகம் சாப்பிட்டு, பருமனால் இறக்கிறவர்கள் எண்ணிக்கை அதிகம்.
பல கேன்ஸர் நோய்கள் எடை அதிகமாவதால்தான் உண்டாகின்றன. வளரும் நாடுகளைவிட வளர்ந்த நாடுகளில்தான் எடை அதிகமுள்ள குழந்தைகள் இருக்கிறார்கள். பருமனைக் குறைக்க சிறந்த வழி தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதுதான்!
* ஒருமணி நேரம் நீந்தினால் 650 கலோரி குறையும். இதில், நடைப்பயிற்சியில் கிடைப்பதைவிட பலன் அதிகம். நீச்சல், உடலிலுள்ள எல்லா தசைக்கும் வேலை கொடுக்கிறது. இதயத்துக்கும் நுரையீரலுக்கும் வலு சேர்க்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. எந்த வயதினரும் நீச்சல் அடிக்கலாம். ஒரு மணி நேரம் நீந்தத் தேவையான சக்திக்கு ஒரு கைப்பிடி வேர்க்கடலை போதும்!
* தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் இதய நோய்கள் ஏற்படாது; ரத்த அழுத்தம் அதிகமாகாமல் சீராக இருக்கும். கொழுப்பு கூடாது. நீரிழிவு எட்டிப் பார்க்காது. சில புற்றுநோய்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம். பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறையும்’ - தைவான் நாட்டில், ஓராண்டு காலத்தில் 20 ஆயிரம் பேர்களிடம் செய்த ஆய்வில் இந்த உண்மைகள் தெரிய வந்திருக்கின்றன.
* ‘தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்’என்கிறது உலக சுகாதார நிறுவனம். ‘இந்த அளவு உடற்பயிற்சியே உங்கள் ஆயுளை 3 ஆண்டுகள் அதிகரித்துவிடும்’ என்கிறார்கள் ஜெர்மனி மருத்துவ விஞ்ஞானிகள்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» உடலையும், மனதையும் இதமாக்கும் உடற்பயிற்சி
» உடற்பயிற்சி - 20
» உடற்பயிற்சி உடற்பயிற்சி
» உடற்பயிற்சி
» உடற்பயிற்சி
» உடற்பயிற்சி - 20
» உடற்பயிற்சி உடற்பயிற்சி
» உடற்பயிற்சி
» உடற்பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum