வாழைப்பூ, முருங்கைக் கீரைப் பொரியல்
Page 1 of 1
வாழைப்பூ, முருங்கைக் கீரைப் பொரியல்
தேவையானப் பொருள்கள்...
வாழைப்பூ - ஒன்று
முருங்கைக் கீரை - ஒரு கப் (உருவியது)
முக்கால் பதம் வெந்த பாசிப்பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - சிறிது
தேங்காய்ப் பூ - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க...
நல்லெண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப் பருப்பு
பெருங்காயம்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை சிறிது
செய்முறை....
• வாழைப் பூவை ஆய்ந்து, பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
• ஒரு வாணலியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு அதில் வாழைப் பூவைப் போட்டு, சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி வேக வைக்கவும்.
• வெந்ததும் நீரை வடித்துவிட்டு, ஆறியதும் தண்ணீர் இல்லாமல் ஒட்டப் பிழிந்து எடுத்து வைக்கவும்.
• கீரையை உருவி, கழுவி எடுத்து வைக்கவும்.
• இப்போது வாணலியை அடுப்பில் வைத்து, தாளிக்க உள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு வாழைப்பூவை சேர்த்து வதக்க வேண்டும். ஏற்கனவே வெந்திருப்பதால் நீண்ட நேரம் வதக்க வேண்டாம்.
• அடுத்து வெந்த பருப்பு, கீரை, உப்பு சேர்த்துக் கிளற வேண்டும்.
• கீரை வெந்ததும் தேங்காய்ப் பூ சேர்த்துக் கிளறி இறக்க வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கீரைப் பூண்டு மசியல்
» டயட் முருங்கைக் கீரை பொரியல்
» வாழைப்பூ பொரியல்
» வாழைப்பூ கொள்ளு பொரியல்
» வாழைப்பூ கொள்ளு பொரியல்
» டயட் முருங்கைக் கீரை பொரியல்
» வாழைப்பூ பொரியல்
» வாழைப்பூ கொள்ளு பொரியல்
» வாழைப்பூ கொள்ளு பொரியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum