கீரைப் பூண்டு மசியல்
Page 1 of 1
கீரைப் பூண்டு மசியல்
தேவையான பொருட்கள்:
கீரை – 1 கட்டு (முளைக்கீரை)
பூண்டுப்பற்கள் – 8
பச்சைமிளகாய் – 1
உப்பு – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
கீரையின் வேரை மட்டும் நீக்கி விட்டு, நன்றாகத் தண்ணீரில் அலசி எடுத்து, பொடியாக நறுக்கவும்.
நறுக்கியக் கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன், பூண்டைப் பொடியாக நறுக்கி, பின் தட்டிப் போடவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப் போடவும். உப்பையும் சேர்த்து, மூடி போட்டு, சிறு தீயில் வேக விடவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. கீரையின் நீர்ச்சத்திலேயே வெந்து விடும்.
நீண்ட நேரம் வேக விடக்கூடாது. நிறம் மாறிவிடும். 2 அல்லது 3 நிமிடங்கள் வெந்தால் போதும்.
கீழே இறக்கி வைத்து, கீரை கடையும் மத்தால் நன்றாகக் கடையவும்.
மத்து இல்லாவிட்டால், வெந்தக் கீரையை சற்று ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
காரமானக் குழம்பு செய்யும் பொழுது, தொட்டுக் கொள்ள இதைச் செய்யலாம். சுடு சாதத்தில், ஒரு டீஸ்பூன் நல்லெண்ணை விட்டு கீரை மசியலைச் சேர்த்து பிசைந்து சாப்பிடச் சுவையாக இருக்கும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» கீரைப் பூண்டு மசியல்
» வாழைப்பூ, முருங்கைக் கீரைப் பொரியல்
» காராகருணை மசியல்
» காராகருணை மசியல்
» அரைக்கீரை மசியல்
» வாழைப்பூ, முருங்கைக் கீரைப் பொரியல்
» காராகருணை மசியல்
» காராகருணை மசியல்
» அரைக்கீரை மசியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum