தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நெல்லிக்காய் ரசம்

Go down

நெல்லிக்காய் ரசம் Empty நெல்லிக்காய் ரசம்

Post  meenu Wed Jan 30, 2013 6:23 pm



தேவையான பொருள்கள்:

பெரிய நெல்லிக்காய் - 10
பச்சை மிளகாய் - 2
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
புளி -சிறிது
பெருங்காயம் - அரை ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
வெந்தயம் - அரை ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

• நெல்லிக்காய் முற்றலாக இருக்க வேண்டும். அதன் மேலே இருக்கும் கோடுகளின் மீது கீறி பெயர்த்தால் கீற்று கீற்றாக நெல்லிக்காய் வந்து விடும்.

• இதனோடு பச்சை மிளகாய், மிளகு, சீரகம், புளி, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கரகரப்பாக அரைத்து அதனுடன் 6 கப் தண்ணீரோடு சேர்த்து கொதிக்க விடவும்.

• 1 ஸ்பூன் எண்ணெயில் கடுகு, வெந்தயம் சேர்த்து வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். ரசம் கொதித்து வரும் போது இந்த பொடியை சேர்த்து கறிவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும்.

• சுவையான பெரிய நெல்லிக்காய் ரசம் தயார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum