வெள்ளரிக்காய் சாதம்
Page 1 of 1
வெள்ளரிக்காய் சாதம்
தேவையான பொருட்கள்:-
பச்சரிசி – 1 கப்.
வெள்ளரி துருவல்– 1/2 கப்.
பச்சை மிளகாய்- 4.
இஞ்சி – ஒரு துண்டு.
எலுமிச்சம்பழச்சாறு – 1 மேசைகரண்டி.
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை.
பெருங்காயத்தூள் – 1 / 2 தேக்கரண்டி.
உப்பு – தேவையான அளவு.
கருவேப்பிலை– சிறிதளவு.
கடுகு, உளுத்தம்பருப்பு- 1/2 தேக்கரன்டி.
நெய்- 1 மேசைகரண்டி.
செய்முறை:-
* முதலில் அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக் கொள்ளவும்.
*பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
*கடாயில் நெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து, பின்னர் வெள்ளரி துருவலையும், தேவையான அளவு உப்பும் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.
* பின் கடைசியாக இந்த கலவையுடன் உதிரியாக வடித்த சாதம், எலுமிச்சம்பழ சாறு கலந்து பரிமாறவும்.
கோடைக்காலங்களில் வெள்ளரிக்காய் சாதம் சாப்பிடுவதால் மனதுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி உண்டாகும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum