தயிர் வெள்ளரிக்காய்
Page 1 of 1
தயிர் வெள்ளரிக்காய்
தேவையான பொருள்கள்:
1.வெள்ளரிக்காய் = 1 துண்டு
2.தயிர் = 2 கரண்டி
3.பச்சை மிளகாய் = 1
4.தேங்காய் = 1 ஸ்பூன்
5.கடுகு = அரை ஸ்பூன்
6.பெருங்காயத்தூள் = அரை ஸ்பூன்
7.கறிவேப்பிலை = சிறிதளவு
8.தேங்காய் எண்ணெய் = தேவையான அளவு
9.உப்பு = தேவையான அளவு
செய்முறை:
வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டு கொள்ளவும். தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் இரண்டையும் அரைத்து வைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் வெள்ளரிக்காய் சேர்த்து ஒரு கிளறு கிளறி தேவையான அளவு உப்பு கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வேக வைத்து அதனுடன் அரைத்த தேங்காயை போட்டு கிளறி இறக்கி சிறிது ஆறியதும் தயிர் சேர்த்து கலந்து பரிமாறவும்.
சுவையான தயிர் வெள்ளரி தயார். இதை நன்கு ஆற வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். சாதத்தோடு சாப்பிட சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
வெள்ளரிக்காய் குறைவான கலோரி அளவு கொண்டது. அதிக அளவு ஈரப்பதம் கொண்டது. சுண்ணாம்புச்சத்து, புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, சல்பர், சிலிக்கான், கால்சியம், பாஸ்பரஸ். இரும்பு, வைட்டமின் “B” மற்றும் வைட்டமின் “C” ஆகியவை காணப்படுகிறது.
இது சிறுநீரகம், பித்த நீர் ஆகியவை சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளையும் குறைக்கும் சக்தி மிகுந்தது. உடல் எடை குறைய நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் வறட்சி குறைந்து உடல் குளிர்ச்சி பெறும். உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» வெள்ளரிக்காய் தயிர் சாலட்
» வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
» வெள்ளரிக்காய்
» வெள்ளரிக்காய்
» வெள்ளரிக்காய் தயிர் சாலட்
» வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
» வெள்ளரிக்காய்
» வெள்ளரிக்காய்
» வெள்ளரிக்காய் தயிர் சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum