கேழ்வரகு நூடுல்ஸ்
Page 1 of 1
கேழ்வரகு நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்....
கேழ்வரகு நூடுல்ஸ் - ஒரு கப்
வெங்காயம் - 200 கிராம்
குடை மிளகாய் - 1
பெரியது கோஸ் - 100 கிராம்
வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
செய்முறை.....
• வெங்காயத்தாள், கோஸ், குடை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
• வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
• கேழ்வரகு நூடுல்ஸ்ஸை சிறிது உப்பு நீர் தெளித்து பிசறி, ஆவியில் வேக வைத்து எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
• ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்கறிகளை உப்பு போட்டு வதக்கவும்.
• பின்னர் வெங்காயத்தாளை சேர்த்து, இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
• பின் கரம் மசாலாவை சேர்க்கவும்.
• கடைசியாக வேகவைத்து எடுத்த கேழ்வரகு நூடுல்ஸை சேர்த்து கிளறி, மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum