புதினா டீ புதினா டீ
Page 1 of 1
புதினா டீ புதினா டீ
தேவையான பொருட்கள்:-
பால்- ஒரு டம்ளர்.
தண்ணீர்- ஒரு டம்ளர்.
சர்க்கரை- மூன்று தேக்கரண்டி.
டீ தூள்- ஒரு தேக்கரண்டி.
புதினா- அரை கை பிடி.
இஞ்சி- ஒரு சிறிய துண்டு.
செய்முறை:-
* இஞ்சியை ஒன்றும் பாதியாக தட்டிக்கொள்ளவும்.
* புதினா இலைகளை மட்டும் ஆய்ந்து மண் இல்லாமல் அலசி வைக்கவும்.
* முதலில் ஒரு பாத்திரத்தில் பால், தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதித்த உடன் அதில் சர்க்கரை சேர்க்கவும்.
*கொதி வரும் போது டீ தூள் போட்டு அதில் இஞ்சியும் சேர்த்து நன்கு பொங்கும் வரை கொதிக்க விட்டு வடித்து விடுங்கள்.
*உடனே புதினா இலைகளை சூடான டீயில் போட்டு இரண்டு நிமிடம் மூடி வையுங்கள்.
*பிறகு வடித்து குடிக்கவும்.
குறிப்பு....
லோ பிரெஷர் உள்ளவர்கள் தீடீர் திடீருன்னு மயக்கமடைந்து கீழே விழுந்து விடுவார்கள். அவர்களுக்கு இந்த டீ ஒரு அரு மருந்து.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum