தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புதினா புதினா

Go down

புதினா  புதினா Empty புதினா புதினா

Post  oviya Thu Mar 21, 2013 9:39 am

மருத்துவக் குணங்கள்:

வயிற்றுவலி, வயிற்றுக் கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புபீசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவகைளை உணரமுடியாத நாக்கு, பித்தம், இயற்கையான குடும்பக்கட்டுப்பாடு திட்ட முறை ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை புதினாக் கீரையாகும். மருத்துவக் குணங்களுடன் மனத்தை மயக்கும் மணத்தையும் இக்கீரை பெற்றுள்ளது. எல்லா உணவு வகைகளிலும் மணம் ஊட்ட இக்கீரையை அயல் நாடுகளில் சேர்க்கின்றன. இதற்காகவே தோட்டம் இல்லாத சூழ்நிலையிலும் தொட்டியிலேயே இக்கீரையைப் பயிர் செய்கின்றனர்.
உலர்ந்த புதினாக் கீரையைப் பொடிசெய்து பல் துலக்கினால் பல் தொடர்பான அனைத்து நோய்களும் உடனே குணமாகும். வயிற்று உப்புசத்திற்கும், நரம்புத்தளர்ச்சிக்கும், இசிவு நோய்க்கும் அரியமருந்து புதினாக் கீரையாகும். அப்போதுதான் பறித்த புதினாக் கீரையை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்து சாறெடுத்து அருந்தினால் நன்கு செரிமானமும் ஆகும். நன்கு பசியெடுக்கும், ஒருகப் சாற்றில் தலா ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசமும் தேனும் சேர்த்து அதிகாலையில் அருந்த வேண்டும். (புதினாச்சாறு தயாரிக்க 50கிராம் கீரையே போதும்) இப்படி அருந்தினால் காலை நேர வயிற்றுப்போக்கு, பித்தமயக்கம், காலையில் எழுந்ததும் ஏற்படும் காய்ச்சல், சிறுநீர்ப்பைகளில் உள்ள கல்லடைப்புகள், வயிற்றுப்பொருமல், குழந்தைகளின் மலக்குடலில் உள்ள கீரைப் பூச்சிகள் முதலியன உடனே குணமாகும்.
உணவு உடனே செரிமானம் ஆகும். ஒரு கப் புதினாச் சாறு அருந்த விருப்பம் இல்லை என்றால், மூன்று வேளையும் தலா ஒரு தேக்கரண்டி புதினாச்சாற்றில் தேனையும் எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து உணவு சாப்பிடுவதற்கு முன்பாக அருந்தினால் போதும், மேற்கண்ட அனைத்து நன்மைகளும் கிட்டும். புதினா இலைகளைப் பச்சையாகவும் மென்று தின்னலாம். அனைத்து மருத்துவ நன்மைகளும் கிடைக்கும். வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற கோளாறு உள்ளவர்கள் புதினாத் துவையல், புதினாசட்னி என்று தயாரித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். புதினாக்கீரையுடன் புளி, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு முதலியவற்றைச் சேர்த்து, முதலில் வதக்கி பிறகு அரைத்துத் துவையல் செய்ய வேண்டும். அடிக்கடி வயிற்றவலியால் வருந்துபவர்கள் இந்த முறையில் துவையல் செய்து, பலகாரம், சாதம் முதலியவற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் வயிற்று வலி பூரணமாய்க் குணமாகும்.
இக்கீரையைப் பச்சடியாகக் சமைத்துச் சாப்பிட்டாலும் வாந்தி, பசியின்மை அகலும். புதினாக் கீரையுடன் இஞ்சியும், மிளகும் சேர்த்துப் பச்சடி தயாரிக்க வேண்டும். மூச்சுவிடச் சிரமப்படுபவர்களும், ஆஸ்தமா நோயாளிகளும், எலும்புருக்கி மற்றும் வறட்டு இருமல், சளி முதலியவற்றால் அவதிப்படுபவர்களும் பின் வருமாறு உட்கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி புதினாச்சாற்றுடன் தலா இரு தேக்கரண்டி வினிகர், தேன், நான்கு அவுன்ஸ் காரட் சாறு ஆகியவற்றைக் கலந்து, தினமும் மூன்று வேளை அருந்த வேண்டும். இது சிறந்த மருத்துவ டானிக் ஆகும். மேற்கண்ட நோய்களுக்கு வேறு எம்மருந்து உட்கொள்பவரும் இந்த டானிக்கை உட்கொள்ளலாம். இது கட்டியான சளியை நீர்த்துவிடக் செய்துவிடுகிறது. டி.பி. மற்றும் ஆஸ்துமா தொடர்பான நோய்க்கிருமிகள் வந்து தாக்கமுடியாதபடி நுரையீரல்களுக்கு நல்ல ஊட்டச்சத்தையும் இந்த டானிக் வழங்குகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. அதனால் ஆஸ்துமாகாரர்கள் ‘கர்புர்’ ரென்று மூச்சுவிடச் சிரமப்படாமல் நிம்மதியாய் இரவில் தூங்கலாம்.
பச்சையாக மென்று புதினாக்கீரையை சாப்பிட்டால் பல் ஈறுகள் பலம் பெறும். பல் தொடர்பான நோய்கள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கலாம். பற்சிதைவும் தடுக்கப்படும். பற்கள் விழுவதும் தாமதப்படும். மேலும் கீரையை மெல்லுவதால் நாக்கில் உள்ள சுவை நரம்புகள் மீண்டும் சக்தி பெறுகின்றன. இதனால் இனிப்பு, உறைப்பு போன்ற எல்லாவிதமான சுவையுள்ள உணவு வகைகளையும் நன்கு ருசித்துச்சாப்பிட முடியும்.
உலர்த்தப்பட்ட புதினாக் கீரையைப் பொடி செய்து பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். மஞ்சள் காமாலை, வாதநோய், காய்ச்சல் முதலியவை குணமாக, மேற்கண்ட நோய்கள் குணமாகும்வரை, இரு சிட்டிகை புதினாப் பொடியைச் சோற்றிலோ ஒரு டம்ளர் தண்ணீர் கலந்தோ சாப்பிட வேண்டும். அவ்வாறு மூன்று வேளை உட்கொள்ள வேண்டும்.
தினமும் காலையும் மாலையும் தேயிலைத் தூளிற்குப் பதிலாகப் புதினாத் தூளைப் பயன்படுத்தித் தேநீர் தயாரித்து அருந்தினால் ஒவ்வொரு நாளும் புத்தம் புது துடிப்புடன் கழியும், சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் ஏற்படும். புதினாத்தேநீர் தயாரிக்கும் போது பாலும் சேர்த்துத்தான் தயாரிக்க வேண்டும். பால்சேர்த்துத் தயாரிக்கப்பட்ட புதினாத் தேநீர் வயிற்றுவலியைப் போக்கி நலம் பயக்கும்.
புதினாக்கீரையைக் கஷாயமாய்த் தயாரித்து, அதைக் கொண்டு வாயை நன்கு கொப்புளித்தால் பாடகர்கள் இனிமையான குரல் வளத்தைத் தொடர்ந்து பெறுவார்கள்; பேச்சாளர்கள் தொண்டைக்கட்டு இல்லாமல் உரத்த குரலில் நன்றாகப் பேசமுடியும். பாட்டுக் கச்சேரி செய்யுமுன்பு இந்தக் கஷாய நீர் கொண்டு வாய் கொப்பளித்து விட்டுப் பாட ஆரம்பித்தால் குரல் பிசிறின்றி ஒலிக்கும். மேற்படி புதினாக் கஷாயத்தில் ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்த பிறகே வாயைக் கொப்புளிக்க வேண்டும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் கெடுதல் விளைவிக்காத குடும்பக்கட்டுபாட்டு மருந்தாகப் புதினாப்பொடி திகழ்கிறது. கரு உருவாவதைத் தடுக்க நினைக்கும் பெண்கள், தாம்பத்தய உறவுக்கு முன்னால், ஒரு தேக்கரண்டிப் பொடியை வாயில் போட்டுத் தண்ணீர் ஊற்றிக்கொண்டால் போதும். மாதவிடாய் தாமதமானால், மூன்று அல்லது நான்கு நாள்கள், ஒரு தேக்கரண்டிப்பொடியைத் தேனில் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டால் மாதவிடாய் தாமதமாவது தடுக்கப்படும்.
முகத்தில் பருக்கள் உள்ளவர்களும், வறண்ட தோல் உள்ளவர்களும் இரவில் படுக்கைக்குச் செல்லும் போது, புதினாக் கீரையைச் சாறாக்கி அதை உடலிலும், முகத்திலும் தடவிக் கொள்ள வேண்டும். காலையில் இரண்டு தேக்கரண்டி புதினாக்கீரைப் பொடியைத் தேன்கலந்து உட்கொள்ள வேண்டும் அல்லது தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும். இத்தனை சிறப்புக்கள் கொண்ட புதினாக் கீரையின் தாயகம், ஐரோப்பா, பண்டைய ரோமானியர்களும் கிரேக்கர்களும் புதினாவை அறிந்திருந்தார்கள். கிரேக்க மருத்துவர்கள் இக்கீரையைப் பல விதமான வயிற்றுக் கோளாறுகள், வயிற்று உப்புசம் முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தினர். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஜப்பானியரும் சீனரும் மருத்துவக் குணம் நிரம்பிய மூலிகையாக இக்கீரையைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றும் இஸ்லாமிய நாடுகளில் புதினாவை முக்கிய மருந்தாக மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். (இதன் விஞ்ஞானப் பெயர் : மின்த்தி ஸ்பைகாட்டா) புதினாக்கீரை மூலம் தினமும் புத்துணர்ச்சி பெறலாம் என்பது உறுதி.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum