தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முளை பயிறு பனீர் சாலட்

Go down

முளை பயிறு பனீர் சாலட் Empty முளை பயிறு பனீர் சாலட்

Post  meenu Wed Jan 30, 2013 5:57 pm


முளை கட்டிய பச்சைப்பயறு அடிக்கடி உபயோகித்தால் சுலபமாக ஜீரணமாகும். புரதத்துடன், நல்ல நார்ச்சத்து, வைட்டமின் - சி, பி- காம்ப்ளெக்ஸ் கிடைக்கும். குழந்தைகயின் ஆரோக்கியமான, உடல் வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும்.

தேவையான பொருட்கள்:

முளை கட்டிய பச்சைப்பயறு - 1 கப்
பனீர் - அரை கப்
மாங்காய் - 1
கேரட் - 2
கொத்தமல்லி தழை - 1 கட்டு
பச்சை மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
சாட் மசாலா தூள் - அரை ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

செய்முறை:

* செய்முறை • பனீரை சதுரமாக வெட்டிக்கொள்ளவும்.

* கேரட்டை துருவிக் கொள்ளவும்.

* மாங்காயை துருவிக் கொள்ளவும்.

* கொத்தமல்லியை நன்றாக கழுவி இலைகளை மட்டும் ஆய்ந்து கொள்ளவும்

* முளைகட்டிய பயறுடன், துறுவிய கேரட், அரிந்த பனீர், மாங்காய் சேர்த்து ஒரு கிண்ணத்தில் போடவும்.

* மிளகாயுடன் கொத்தமல்லி, உப்பு சேர்த்து தண்ணீல் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

* அரைத்த் விழுதுடன் ஆலிவ் எண்ணெய், எலுமிச்ரை சாறு, சாட்மசாலா தூள் கலந்து ஒரு சிறிய டப்பாவில் போட்டு நன்கு குலுக்கி ஒன்று சேர்ந்ததும் கலந்து வைத்துள்ள முளைப்பயறுடன் சேர்க்கவும்.

* அதிகம் கலக்காமல் குலுக்கிவிட்டு குளிச்சாதனப்பெட்டியில் அரை மணி நேரம் வைத்து பரிமாறவும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum