திராட்சை இஞ்சி பழரசம்
Page 1 of 1
திராட்சை இஞ்சி பழரசம்
தேவையான பொருட்கள்.......
கருப்பு திராட்சை - அரை கிலோ
உப்பு - ஒரு சிட்டிகை
தேன் - 5 டேபுள் ஸ்பூன் (அ) சுகர் லைட்
தண்ணீர் - 2 கப்
இஞ்சி சாறு - 3 டேபுள் ஸ்பூன்
குங்குமப்பூ - 2 இதழ்
ஐஸ் கட்டி - ஆறு
செய்முறை......
• திராட்சையில் ஒரு 10 அல்லது 15 எடுத்து தோல் உரித்து கொட்டையை எடுத்து ஒவ்வொன்றையும் நான்காக அரிந்து தனியாக எடுத்து வைக்கவும்.
• மிக்சியில் திராட்சை உப்பு, தேன், தண்ணீர், இஞ்சி சாறு, குங்குமப்பூ, ஐஸ் கட்டி போட்டு நல்ல பத்து நிமிடம் ஓட விட்டு வடிகட்டி பெரிய ஜுஸ் டம்ளரில் ஊற்றி கட் பண்ணி வைத்துள்ள திராட்சையை டம்ளரில் போட்டு பரிமாறவும்.
குறிப்பு: * திராட்சை சிலது புளிக்கும் ஆகையால் இஞ்சி சாறு சேர்க்க வேண்டும். திராட்சை குளுமை சிலபேருக்கு தொண்டை பிடிக்கும் ஆகையால் குங்மப்பூ சேர்த்தால் இஞ்சி, குங்குமப்பூ சேர்ந்து சளியை கட்டுபடுத்தும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum