வெஜிடபிள் ஜூஸ்
Page 1 of 1
வெஜிடபிள் ஜூஸ்
தேவையான பொருட்கள்:
கேரட் - 100 கிராம்
பீட்ரூட் - 50 கிராம்
கோஸ் - 50 கிராம்
தண்ணீர் - 2 டம்ளர்
இஞ்சி - 1
புதினா - கைப்பிடி அளவு.
வெல்லம் - சிறிய தூண்டு
செய்முறை:
• கேரட்டை சுடுதண்ணீரில் கழுவிக் கொள்ளவும், பிறகு பீட்ரூட்டை வேகவைத்துக் (சீக்கிரம் வேகாது) கொண்டு, கோஸையும் வேகவைத்து விட்டு மூன்றையும் ஒன்றாகவே மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
• இதோடு 2 டம்ளர் தண்ணீரை ஊற்றி துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
• வடிகட்டிய ஜூஸில், தனியாக இஞ்சி, புதினா அரைத்து மேலே தூவ வேண்டும்.
• ஒரு கட்டி வெல்லத்தை அப்படியே போட வேண்டும். குடிச்சுப் பாருங்க வெஜிடபுள் ஜூஸ். ஆரோக்கியம் தானா வரும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum