தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துவளை ரசம்

Go down

 துவளை ரசம்  Empty துவளை ரசம்

Post  meenu Wed Jan 30, 2013 2:44 pm

தேவையானப்பொருட்கள்:

தூதுவளை-1 கப்


தக்காளி-1


பூண்டு- 4 பல்


புளி- நெல்லிக்காய் அளவு

உப்பு-தே.அளவு


துவரம் பருப்பு-கால் கப்


மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்


ரசப் பொடி-1 டே.ஸ்பூன்


தாளிக்க: எண்ணெய் -2 டீஸ்பூன்


கடுகு-1 டீஸ்பூன்


பெருங்காயம்-2

கறிவேப்பிலை-1

கொத்து கிள்ளிய வர மிளகாய்-2


கொத்தமல்லித் தழை


செய்முறை:


முதலில் துவரம்பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் குழைய வேக வைத்து கரைத்து எடுத்து தனியே வைக்கவும்.


• தூதுவளை இலைகளை கவனமாக முள் குத்தாமல் பார்த்து ஆய்ந்து எடுத்து சுத்தம் செய்து நீரில் அலசி,தண்ணீரை வடித்து வைக்கவும்.


• பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சுத்தம் செய்த தூதுவளை இலைகளை போட்டு வதக்கி எடுத்து தனியே வைக்கவும்.


• புளியை கரைத்து எடுத்து பருப்புத் தண்ணீருடன் சேர்த்து, அதனுடன் ரசப்
பொடியையும் கலந்து(ரசப் பொடிக்கு-மிளகு,சீரகம்,தனியா-தலா 1 டீஸ்பூன்,2 வர
மிளகாய் வைத்து பொடி செய்து அதனுடன் 4 பல் பூண்டையும் போட்டு ஒரு சுற்று
சுற்றி எடுத்துக் கொள்ளவும். இந்த முறையில் செய்தால் ரசம் மிக வாசமாக
இருக்கும்), தக்காளியையும் கரைத்துக் கொள்ளவும்.

• தேவையான உப்பு சேர்க்கவும்.


• அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தை வைத்து மீதமுள்ள எண்ணெயை விட்டு
கடுகு,பெருங்காயம்,கறிவேப்பிலை,வர மிளகாய் தாளித்து,வதக்கிய தூதுவளை இலைகளை
சேர்த்து,கரைத்து வைத்துள்ள பருப்புத் தண்ணீரை ஊற்றவும். பூண்டை தட்டி
போடவும்.(அல்லது ரசப் பொடியுடனும் சேர்க்கலாம்)


• ரசம் நுரைத்து பொங்கி வரும் போது அடுப்பை அணைத்து விடவும். கொத்தமல்லித் தழை தூவி சூடாக பரிமாறவும்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum