தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முளைப்பயிறு சப்பாத்தி

Go down

முளைப்பயிறு சப்பாத்தி Empty முளைப்பயிறு சப்பாத்தி

Post  meenu Wed Jan 30, 2013 2:19 pm

தேவையானப் பொருட்கள்....


முளைத்த பச்சைப்பயிறு - 3/4 கப்

பெரிய வெங்காயம் - 1

நாட்டுத் தக்காளி - 2

சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

மிளகாப் பொடி - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:

• கோதுமை மாவில் உப்பு 1 ஸ்பூன் எண்ணை ஊற்றி பிசைந்து எடுக்கவும்.


* முளைப்பயிறை ஆவியில் வேகவைக்கவும்.


* வாணலியில் சிறிதளவு எண்ணை விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு
இவற்றை வதக்கவும். பின் பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு நன்கு
வதக்கவும்.


* வதங்கிய பின் பொடி வகைகளைச் சேர்த்து சற்று நீர் தெளித்து, பச்சை வாடைப் போக வதக்கவும்.


* வேக வைத்துள்ள பச்சைப் பயிறை சற்று மசித்து, வதக்கிப் பொருட்களுடன் சேர்த்து கிளறவும்.


• தேவையான உப்பு சேர்த்து கலந்து, வாணலியில் எல்லாம் ஒன்றாக சேர்த்து கிளறி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கி ஆற வைக்கவும்.

• இரு மெல்லிய சப்பாத்திகள் இடவும்.


• ஒரு சப்பாத்தி நடுவே பூரணத்தை பரவலாக வைத்து, மேலே இன்னொரு சப்பாத்தி
வைத்து மூடி, ஓரங்களை ஒட்டி, தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் வெந்தபின்
எடுக்கவும்.


• இதற்கு சைடிஷ்ஷே தேவையில்லை. சுவையான சத்தான சப்பாத்தி.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum