தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயற்கை அழகு குறிப்புகள்

Go down

இயற்கை அழகு குறிப்புகள் Empty இயற்கை அழகு குறிப்புகள்

Post  meenu Wed Jan 30, 2013 1:14 pm

* பச்சை கொத்தமல்லி அல்லது புதினாவை நன்றாக அரைத்து
முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி வந்தால் முக வறட்சி
நீங்கும்.

* முகப்பருவால் ஏற்படும் கரும்புள்ளி மறைய ஜாதிக்காயை அரைத்துப் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

* பூண்டு அல்லது கருந்துளசியை அரைத்துப் போட நாளடைவில் முகப்பரு மறையும்.

* புதினா கீரையைக் காய வைத்து பொடி செய்து பல் துலக்கி வந்தால் வாய் நாற்றமின்றிப் பல் பளிச்சென்றிருக்கும்.

* இரவு நேரத்தில் பச்சை கேரட்டை மென்று தின்றால் பல் உறுதியடைவதுடன், பல் வெண்மை அடையும்.

* உதட்டில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் ஷைனிங்காக இருக்கும்.

*
பாத்திரம் தேய்ப்பதால் ஏற்படும் கை வெடிப்புகளுக்கு உருளைக்கிழங்கை வேக
வைத்து பொடித்து கைகளில் தேய்த்து வந்தால் கை மிருதுவாக இருக்கும்.

* நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண்ணெயை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்.

*
ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி, சமமான அளவு பயத்தம் மாவு கலந்து அரைத்து
தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் அகலும்.

* பப்பாளிக் காயை பொறியலோ, குழம்பு வைத்தோ வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

*
பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்ணை ஒரு ஸ்பூன், பன்னீர் இரண்டு
ஸ்பூன், எலுமிச்சம் சாறு ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து வெந்நீரில் பத்து
நிமிடம் காலை ஊறவிட்டு, பின்பு இக்கலவையைப் பூசிவர வெடிப்பு நீங்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum