ஆஹா... அழகான பாதங்கள்
Page 1 of 1
ஆஹா... அழகான பாதங்கள்
• உடலைத் தாங்கி நிற்கும் கால்களை நாம் பெரும்பாலும் கண்டு
கொள்வதில்லை. பல இடங்களுக்கும் பயணிக்கும் பாதங்களை பராமரிப்பதில்தான்
நமது அழகும், ஆரோக்கியமும் இருக்கிறது. இளம் வயதில் பாதங்களை
கவனிக்காவிட்டால் முதுமையில் முழங்கால்கள் காலை வாரிவிடும். வலியால் வாட்டி
ஆளைச் சுருட்டிவிடும்.
• அழகுபடுத்த மட்டுமல்லாமல்
ஆரோக்கியத்திற்காகவும் பாதங்களை தினமும் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
இதற்காக `புட்பாத்' முறை இருக்கிறது. அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான
நீரைப் பரப்பி பாதங்களை சில நிமிடங்கள் மூழ்க வைக்க வேண்டும். பிறகு காலை
வெளியே எடுத்து சில நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த தண்ணீரில் சில
நிமிடங்கள் பாதங்களை வைத்திருக்க வேண்டும்.
• பாதக்
குளியல் (புட்பாத்) செய்வதால் கால்களுக்கு ரத்த ஓட்டம் சீராகப் பரவுகிறது.
உடல் களைப்பு நீங்குகிறது. மாலை நேரத்தில் டி.வி. பார்த்துக் கொண்டே கூட
`புட்பாத்' எடுக்கலாம். வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்துக்
கொண்டால் இன்னும் புத்துணர்ச்சி கிடைக்கும். புட்பாத் முடித்ததும் துண்டால்
பாதங்களை துடைத்து பவுடர் போட்டுக் கொள்ளலாம்.
•
`புட்பாத்'போல `புட் மசாஜ்' செய்தும் கால்களை பராமரிக்கலாம். இரவில்
தூங்கும் முன் `புட் மசாஜ்' செய்யலாம். `புட் கிரீம்' கொண்டு குதிகால்
முதல் விரல் நுனிவரை மேல்நோக்கி மசாஜ் செய்யுங்கள். விரல்களை வட்டமாக
சுழற்றி மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை சீராக்கும். தினமும் மசாஜ் செய்வதால்
பாதங்கள் களைப்படையாமல் உங்களை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும்.
•
ஆரோக்கியமான பாதங்களுக்கு சில பயிற்சிகளை செய்யலாம். நாற்காலியில்
அமர்ந்தபடி கணுக்கால்களை சிலமுறை ஒரு திசையிலும், பிறகு எதிர்திசையிலும்
சுழற்றி பயிற்சி செய்யலாம். அதேபோல நேராக நின்று கொண்டு குதிகாலை சேர்த்து
வைத்து பாதங்களை `வி' வடிவில் விரித்து சிலநிமிடம் நின்று பயிற்சி
செய்யலாம். இதனால் கணுக்கால், கெண்டைக்கால் திசு வலுப்பெறும்.
•
பாதங்களுக்கான இன்னொரு பயிற்சி இது. பாதங்களை இணையாக வைத்து நின்றுகொண்டு
பாதங்களை மேல்நோக்கி உயர்த்தி குதிகால் பலத்தில் நிற்கவேண்டும். சிலமுறை
இப்படி செய்வதால் தசைகள் வலுப்பெறும். ஓய்வாக இருக்கும்போது பாதங்களை
தலையணையில் தூக்கி வைத்து பாதங்களுக்கு ஓய்வு கொடுங்கள்.
•
ஷூ மற்றும் செருப்புகளால் கால்கள் பாதிக்கப்படலாம். எனவே அவற்றை
தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. ஷூ - செருப்புகள் அடிப்பக்கம்
அகலமானதாகவும், மேல்பக்கம் மெத்தென்று மிருதுவாகவும் இருக்க வேண்டும்.
பொருத்தமான அளவுள்ள காலணிகளையே தேர்வு செய்ய வேண்டும். குதிகால் உயரமான
காலணிகளை தவிர்க்கலாம்.
• கால் அலங்காரத்திற்காக
நெயில் பாலிஷ் செய்யலாம். முதலில் நகங்களிலுள்ள பழைய நெயில் பாலிஷ்களை
அகற்ற வேண்டும். வெதுவெதுப்பான நீரில் கால்களை மூழ்க வைத்துவிட்டு வறண்ட
தோல்களை நீக்க வேண்டும். நக இடுக்கில் உள்ள அழுக்குகளையும் சுத்தம் செய்ய
வேண்டும். பிறகு தண்ணீரை துடைத்துவிட்டு நகங்களை சீராக வெட்டி மீண்டும்
`நெயில் பாலிஷ்' போட்டுக் கொள்ளவேண்டும்.
•
கால்களில் பித்த வெடிப்பு, கால் ஆணி, சேற்றுப்புண் போன்ற பாதிப்புகள்
ஏற்படக்கூடும். சேற்றுப்புண், செருப்புக்கடி புண்களின் வழியே கிருமிகள்
உடலுக்குள் புகுந்தால் பல வியாதிகள் உருவாகும். எனவே கால்களில் ஏற்படும்
புண்கள், பாதிப்புகளுக்கு உடனே சரியான மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
நன்கு பராமரிக்கப்படும் தாமரை மலர் பாதங்களுடன் தான் ஆரோக்கியமான
வாழ்க்கைப் பயணம் சாத்தியம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கவனம்....பாதங்கள்....
» மங்கையரின் பாதங்கள் ஜோதிடம்
» அழகான பாதத்திற்கு
» அழகான ஒப்பனை
» அழகான கழுத்துக்கு
» மங்கையரின் பாதங்கள் ஜோதிடம்
» அழகான பாதத்திற்கு
» அழகான ஒப்பனை
» அழகான கழுத்துக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum