தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உதட்டு அழகை பாதுகாக்க உதட்டு அழகை பாதுகாக்க

Go down

உதட்டு அழகை பாதுகாக்க உதட்டு அழகை பாதுகாக்க Empty உதட்டு அழகை பாதுகாக்க உதட்டு அழகை பாதுகாக்க

Post  meenu Wed Jan 30, 2013 12:11 pm

* தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.

* வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.

* உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.

* மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

* தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும்.

* லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

* இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum