தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எளிய அழகு குறிப்புகள்

Go down

எளிய அழகு குறிப்புகள் Empty எளிய அழகு குறிப்புகள்

Post  meenu Wed Jan 30, 2013 11:57 am

மணப்பெண்கள் திருமணமாவதற்கு 3 மாதத்திற்கு முன்பு இருந்தே உடலையும் ஆரோக்கியத்தையும் முறையாக பராமரிக்க வேண்டும்.அப்போது தான் மணப்பெண்ணின் முக அழகானது வீடியோ, போட்டோவில் வசிகரமானதாகவும்,அழகாகவும் தெரியும். அதற்கு சில வழிகள்::
* நன்கு கனிந்த தக்காளியில் சாறு எடுத்து காலை மாலை இரு வேளை முகம் முழுவதும் பூசி ஒரு மணி நேரம் உலரவிட வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து தினமும் செய்து வந்தால் முகம் படிப்படியாக நல்ல நிறத்திற்கு மாறுவதை காணலாம்.

* கடலைமாவுடன் சிறிது தயிர் சேர்த்து முகத்தில் தடவி அரை மணிநேரம் உலர விட்டு பின் வெது வெதுப்பான நீரில் கழுவி வர முகம் பொலிவு பெறும். கடலைமாவு ஒரு மிகச்சிறந்த கிளன்சிங் ஏஜண்ட் ஆகும்.

* நகங்களில் அவ்வப்போது ஆலிவ் எண்ணெய் சிறிது எடுத்து மசாஜ் செய்து கொள்வதால் நகங்கள் பலப்படும். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஆலிவ் எண்ணெயை எடுத்து கைவிரல்களை நன்கு உருவி தேய்த்து மசாஜ் செய்து கொள்ள வேண்டும். விரல்களை மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் சிராகும்.இவ்வாறு செய்வதால் கைகளை பார்க்க அழகாக இருக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum