தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பார்சுவ உத்தித பாதாசனம்

Go down

பார்சுவ உத்தித பாதாசனம் Empty பார்சுவ உத்தித பாதாசனம்

Post  meenu Tue Jan 29, 2013 4:44 pm

முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்துக்கொள்ளவும். பின்னர் இரு கைகளையும் உடலோடு உள்ளங்கை தரையில் படுமாறு வைக்கவும். அதற்குபிறகு இயல்பான சுவாசத்தில், வலதுகாலை இடுப்பிலிருந்து செங்குத்தாக மேலே தூக்குங்கள். இரு கைகளால் மேலிருக்கும் வலது கால் கட்டைவிரலை பிடித்து உடலை நிமிர்த்தவும்.

இத்துடன் முகத்தால் வலது முழங்காலை தொடவும் முயற்சியுங்கள். அதே சமயத்தில் இடதுகால் மடங்காமல் தரையில் பதிந்திருக்கவேண்டியது அவசியம். இயல்பான சுவாசத்தில் 20 விநாடிகள் இருந்து பின் பழைய நிலைக்கு வரவும். இதேபோல இடதுகாலை மாற்றி செய்யவும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யலாம்.

பயன்கள்:

இந்த ஆசனத்தை செய்வதால் வயிற்று கோளாறுகள் வராது. முதுகுவலி நீங்கும். வாயு கோளாறு அகலும். ஹிரண்யா, மூலநோய், மலச்சிக்கல் நீங்கும். தொடை, முழங்கால் நன்கு வலுப்படும். தொடையில் உள்ள கொழுப்பு குறையும். அலுவலகத்தில் உட்கார்ந்து பணி புரிபவர்களுக்கு உகந்த ஆசனமிது!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum