தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புஜங்காசனம்

Go down

 புஜங்காசனம்  Empty புஜங்காசனம்

Post  meenu Tue Jan 29, 2013 3:33 pm

யோகாசனம் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாகும். யோகாசனப் பயிற்சியின் மூலம் மன அழுத்தம் குறையும்.

செய்முறை...

குப்புறப் படுத்துக் கொண்டு கைகளைப் பக்கங்களில் காதுக்கு நேராக தரையில் பொத்தியவாறு வைத்து தலையை மட்டும் பாம்பு போல் மெதுவாக முடிந்தவரை தூக்கி கழுத்துக்குப்பின் வளைக்கவும். சாதாரண மூச்சு. பின் மெதுவாகத் தலையைக் கீழே இறக்கவும். ஒரு முறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம்.

புஜங்கம் என்றால் பாம்பு எனப் பொருள். பாம்பு படம் எடுப்பதைப் போல் வளைவதால் இவ்வாசனம் புஜங்காசனம் எனப் பெயர் பெற்றது.

பலன்கள்....

வயிற்றறையில் தசைகள் இழுக்கப்படுவதால் அங்கு ரத்த ஓட்டம் ஏற்படும். முதுகெலும்பு பலம் பெறும். மார்பு விரிந்து விலாவில் பலமடையும். ஆஸ்துமா நோய்க்கு முக்கிய ஆசனம் புஜங்காசனம் செய்தவன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்குகிறது. வெள்ளைப்படுதல், மாதவிடாய் தள்ளிப்போதல் போன்ற நோய்கள் மறையும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum