தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அழகுக் கவலை!

Go down

அழகுக் கவலை! Empty அழகுக் கவலை!

Post  meenu Tue Jan 29, 2013 12:54 pm

டீன் ஏஜ் பெண்கள் பல நேரங்களில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் இவர்களுக்கும் நல்ல ஆலோசகர்கள் இல்லாத நிலையில்தான் தீய நண்பர்களின் சகவாசத்தால் போதை, பாலியல் உறவு என தவறான பழக்க வழக்கங்களை நோக்கி அவர்களின் பயணம் தொடங்குகிறது.

இதனால் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை சிக்கல் மிகுந்ததாக மாறுகிறது. பெரும்பாலும் `அழகாக இல்லை, குட்டையாக இருக்கிறேன், தலைமுடி நீளமாக இல்லை, பற்கள் வரிசையாக இல்லாமல் துருத்திக் கொண்டு இருக்கின்றன, குண்டாக இருக்கிறேன், முகப்பருக்கள் அதிகமாக உள்ளன' போன்ற பிரச்சினைகளே அவர்களை கவலையடையச் செய்கின்றன.

நாளாக நாளாக கவலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் தங்களைப் பற்றிய தாழ்ந்த சுயமதிப்பீட்டிற்கு ஆளாகிறார்கள். விளைவு? படிப்பில் நாட்டம் குறைந்து, தனிமையை விரும்பி மற்றவர்களிடம் இருந்து விலகத் தொடங்குகிறார்கள். இவ்வாறு பெண்கள் தனிமையை நாடத் தொடங்கினாலே, அவர்கள் மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

இந்தப் பருவத்தில் தங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை தெளிவாகத் தெரிந்து கொண்டு, தங்களுடைய உடல்நலப் பராமரிப்புக்குத் தேவையான பொறுப்பையும், வழிமுறைகளையும் சுயமாக வளர்த்துக் கொண்டாலே போதும். பிரச்சினைகளில் இருந்து சுலபமாகத் தப்பி விடலாம். பெரும்பாலான பெண்கள் அதிகம் சாப்பிடுவதில்லை.

அதிலும் குறிப்பாக டீன்ஏஜ் வயதுகளில் உள்ளவர்கள் `ஸ்லிம்`மாக இருந்தால்தான் அழகு என நினைத்து பட்டினி கிடக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் ரத்த சோகை போன்ற நோய்க்கு ஆளாகின்றனர். எனவே சத்தான காய்கறிகள், பழங்கள் சாப்பிட அவர்களை பழக்கப்படுத்த வேண்டும்.

உயரமாக இல்லாமல் குட்டையாக இருக்கிறோம் என்ற கவலை சிலருக்கு வரும். இது இவர்களே தானாக வரவழைத்துக் கொண்ட கவலைதான். உயரம் குறைவாக இருப்பதற்கு ஹார்மோன் கோளாறு, உணவுப்பற்றாக்குறை... இப்படி பல காரணங்கள் இருக்கின்றன. சிலருக்கு வளர்ச்சி தள்ளிப் போவதும் உண்டு.

இவர்கள் சில வருடங்கள் சென்றபின் வேகமாக வளர்ந்து, தங்களின் சராசரி உயரத்தை அடைவர். பருவ வயதுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவர்களுக்குத் தெளிவு ஏற்படும் வண்ணம் பெற்றோர்கள் பேச வேண்டும். பேச கூச்சமுள்ள பெற்றோர் அது தொடர்பான புத்தகங்களை அவர்களுக்கு படிக்கத் தரலாம்.

உடல் மாற்றங்கள், பழக்க வழக்கங்கள், சமூக, கலாச்சார மாறுதல்கள் போன்ற விஷயங்கள் பற்றி பெற்றோர்கள் குழந்தைகளிடம் சுதந்திரமாக பேச வேண்டும். இவ்வாறு பேசுவதற்கு பெரும்பாலான பெற்றோர் தயங்குகிறார்கள். அப்படித் தயங்கிக் கொண்டிராமல் பிள்ளைகளிடம் சகஜமாக பேசி, அவர்களின் உடல் ரீதியான, மன ரீதியான பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது நல்லது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum