தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வீட்டிலேயே பெறலாம் `பியூட்டி'!

Go down

வீட்டிலேயே பெறலாம் `பியூட்டி'! Empty வீட்டிலேயே பெறலாம் `பியூட்டி'!

Post  meenu Tue Jan 29, 2013 12:10 pm

பெண்கள் முதல் ஆண்கள் வரை அழகை விரும்பாதவர்களே கிடையாது. அதிலும் இளவயது பெண்கள் அழகின் மீது அதிக அக்கறை காட்டுகின்றனர். இதற்காக பியூட்டி பார்லர் சென்று தங்கள் அழகை மெருகேற்றிக் கொள்கின்றனர்.இதனால் அதிக பணம் செலவாவதுடன், ரசாயனம் கலந்த `க்ரீம்'களால் `அலர்ஜி'யும் ஏற்படுகிறது. எனவே, வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மென்மையான சருமத்தை எப்படிப் பெறுவது என்பதை இங்கே பார்ப்போம்...

* மஞ்சள்தூள், சந்தனத்தூள், ஆலிவ் எண்ணெய் கலவையை உடல் முழுவதும் பூசி, 10 நிமிடங்களுக்குப் பிறகு குளிக்க வேண்டும். இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவை செய்து வர சருமம் மென்மை பெறும்.

* பாலும், எலுமிச்சைபழச் சாறும் கலந்த கலலையை முகத்தில் பூசி, இயற்கையான முறையில் `பிளீச்' செய்யலாம்.

* வெயில் நேரத்தில் வெளியில் சுற்றுவதால் முகம் கறுத்து விடும். இதைத் தடுக்க வெளியில் சென்று வந்த பின் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளிச் சாற்றை சம அளவில் கலந்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்களுக்குப் பின் குளிக்கலாம் அல்லது முகத்தை மட்டும் கழுவிக் கொள்ளலாம்.

* முகம், கை, கால், கழுத்து போன்ற இடங்களில் பாலை உபயோகித்து மென்மையாக மசாஜ் செய்யலாம். இதனால் சருமம் பளபளப்பாவதுடன், மிருதுவாகவும் இருக்கும்.

* கடுகு எண்ணெயை உடலில் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு கடலை மாவு அல்லது சோப் உபயோகித்துக் குளிக்கவும்.

* சிலருக்கு சருமம் அடிக்கடி உலர்ந்து விடும். இவர்கள் வெயிலில் செல்வதை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. அதுபோல் தங்கியிருக்கும் அறைகளில் அதிக வெப்பம் இல்லாமல் ஈரப்பதத்துடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

* குளித்த பின்னர் கனமான துண்டைக் கொண்டு முரட்டுத்தனமாக துவட்டக் கூடாது. மென்மையான துண்டை உடம்பின் மீது வைத்து ஒற்றியெடுத்தால் போதுமானது.

* வைட்டமின் `ஏ' மற்றும் `சி' அதிகமுள்ள காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

- மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் செலவில்லாமல் மென்மையான சருமத்தைப் பெற்று பிறரைக் கவரலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum