தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள் சருமத்தை அழகாக்கும் உணவுகள்

Go down

உங்கள் சருமத்தை அழகாக்கும் உணவுகள் Empty உங்கள் சருமத்தை அழகாக்கும் உணவுகள்

Post  meenu Tue Jan 29, 2013 12:02 pm

உடலின் வெளி அழகுக்கும், உள் ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியம் கீரை. எல்லா வகையான கீரையும் அதிகம் சாப்பிடலாம். குறிப்பாக வெந்தயக்கீரை, பசலைக்கீரை,முருங்கை கீரைகளில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் ஜிங்க் சத்து இருக்கு. இந்த கீரைகளுடன் வைட்டமின் சி சத்துள்ள உணவுகள் சேர்த்தும் சாப்பிடும் பொழுது இன்னும் அதிகமான சத்துக்கள் கிடைக்கும்.

இதன் மூலம் கண்களுக்கு கீழே வரும் கருவளையம் குறையும். முகத்தில் பருக்கள் வருவதும் குறையும். அதிக வறண்ட சருமம் உள்ளவர்கள் உணவில் கொழுப்பு நிறைந்த உணவுகள் (உடல் நலனுக்கு ஏற்ப) உணவில் சேர்த்துக்கொள்ளவும். ஆலீவ் ஆயில், எள் எண்ணெய், கடலை எண்ணெய், நெய் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

தக்காளி ஆண்டி ஆக்ஸிடெண்ட்களான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழம் வைட்டமின் சி தோலுக்கு எலாஸ்டிக் தன்மை தருகிறது. சருமம் கறுப்பதும் தடுக்கும். இளமையிலே சிலருக்கு முதுமையான தோற்றம் இருக்கும் அவங்க தினமும் ஒரு கைபிடியளவு ஸ்ட்ராபெர்ரி அல்லது 3 நெல்லிக்காய் சாப்பிடவும். தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum