உங்க லிப்ஸ்டிக் தரமானதா?
Page 1 of 1
உங்க லிப்ஸ்டிக் தரமானதா?
உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது இன்றைக்கு பேஷனாகிவிட்டது. தரமான லிப்ஸ்டிக் உபயோகித்தால் மட்டுமே உதடுகளை பாதுகாக்க முடியும். இல்லையெனில் உதடுகள் கருத்தும் வறண்டும் போய்விடும். ஒருவர் உபயோகித்த லிப்ஸ்டிக்குகளை மற்றவர்கள் உபயோகிக்க கூடாது இதனால் தொற்றுக்கிருமிகள் தாக்கும். எனவே தனியாக லிப்ஸ்டிக் வாங்கி உபயோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.
நம்முடைய நிறத்திற்கு எந்த நிறம் பொருந்துமோ அதற்கேற்ப லிப்ஸ்டிக்கை தேர்வு செய்து உபயோகிக்க வேண்டும்.லிப்ஸ்டிக் போடுவதற்கு முன் ஐஸ்களால் ஒத்தடம் கொடுத்தால் லிப்ஸ்டிக் நீண்டநேரம் இருக்கும்.லிப் பேஸ் பூசிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் போட்டாலும் நீண்டநேரத்திற்கு இருக்கும்.லாங்லாஸ்டிங் பூசினால் 5 முதல் 8 மணி நேரம் நீடிக்கும்.
ஆழமான நிறத்தைத் தரும், எளிதில் அழிந்துவிடாது. ஆனால் உதடுகளை உலர வைக்கும். உதடுகள் உலர்ந்துவிட்டதைப் போல் தோன்றினால் கன்டிஷனர் தடவலாம். லிப் கிளாஸ் பளபளப்பானது. அதே நேரத்தில் மிகக் குறைந்த அளவில் நிறத்தை தரக் கூடியது. லேசான நிறம் பெற சிறந்தது. ஆனால் அதிக நேரம் நீடிக்காது.
லிப்ஸ்டிக் உபயோகித்து பழக்கம் இல்லாதவர்கள் அலர்ஜி ஏற்படும் என்று அஞ்சுபவர்கள் பல வர்ணங்களில் கிடைக்கும் வாஸலின்களை உபயோகிக்கலாம். அதேபோல் லிப் கிளாஸ் போடலாம். உதடுகளில் போட்ட லிப்ஸ்டிக்குகளை நீக்க பேஷ்வாஸ் அல்லது தேங்காய் எண்ணெயை தடவலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உங்க லிப்ஸ்டிக் தரமானதா? உதடு பத்திரம் !
» எடுப்பான `லிப்ஸ்டிக்' எப்படி போடுவது?
» லிப்ஸ்டிக்
» லிப்ஸ்டிக் போட தெரியுமா?
» லிப்ஸ்டிக் போட தெரியுமா?
» எடுப்பான `லிப்ஸ்டிக்' எப்படி போடுவது?
» லிப்ஸ்டிக்
» லிப்ஸ்டிக் போட தெரியுமா?
» லிப்ஸ்டிக் போட தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum