லிப்ஸ்டிக் போட தெரியுமா?
Page 1 of 1
லிப்ஸ்டிக் போட தெரியுமா?
லிப்ஸ்டிக் போடுவதற்கு முன் நம் நிறத்திற்கு ஏற்ற சரியான கலரை தேர்ந்தெடுக்க வேண்டும். நிறம் குறைவாகவோ, மாநிறமாகவோ உள்ள பெண்கள் லைட் பிரவுன், லைட் செர்ரி நிற லிப்ஸ்டிக் பூச வேண்டும்.
சிவப்பு நிற பெண்கள் ஆரஞ்சு, சிவப்பு, பிங்க் நிற லிப்ஸ்டிக் பூச வேண்டும்.
லிப்ஸ்டிக் பூசும் போது, இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக பூச வேண்டும். மேலும், கீழும் போட்டு இழுக்கக் கூடாது. அதிகமாக லிப்ஸ்டிக் பூசி விட்டால், டிஷ்யூ பேப்பரால் ஒற்றி எடுத்து, சரி செய்யுங்கள். ஈரமான உதடுகளில் லிப்ஸ்டிக் போடக்கூடாது. இதழ்கள் ஈரமாக இருந்தால், முகப்பவுடரை தடவி காய்ந்த பின்னர் அதன் பிறகு லிப்ஸ்டிக் போட வேண்டும்.
லிப்ஸ்டிக் பூசிய பிறகு, உதட்டால் ஈரப்படுத்துவதோ, பானங்கள் அருந்துவதோ கூடாது.முதலில் லிப்ஸ்டிக்கை தடவி, பிறகு லிப் லைனரால் அவுட் லைனும் செய்யலாம்.
இம்முறை உதடுகளை மென்மையானதாக, கவர்ச்சியானதாக காட்டும். லிப்ஸ்டிக் போட்டவர்கள் அதிக நேரம் வெயிலில் அலைவதோ, ஒரு லிப்ஸ்டிக்கை ஆறு மாதத்துக்கு மேல் பயன்படுத்துவதோ கூடாது.
பொதுவாக லிப்ஸ்டிக் போடுவதற்கு முன், தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவி, 10 நிமிடம் கழித்து வெது, வெதுப்பான வெந்நீரில் ஒரு துணியை நனைத்து, உதடுகளை துடைக்கவும். அதன் பிறகு, லிப்ஸ்டிக் போடுவது நல்லது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» லிப்ஸ்டிக் போட தெரியுமா?
» லிப்ஸ்டிக் எப்படி போடணும் தெரியுமா?
» லிப்ஸ்டிக் போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்
» உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போடும்போது கவனிக்க வேண்டியவை
» உங்க லிப்ஸ்டிக் தரமானதா?
» லிப்ஸ்டிக் எப்படி போடணும் தெரியுமா?
» லிப்ஸ்டிக் போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்
» உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போடும்போது கவனிக்க வேண்டியவை
» உங்க லிப்ஸ்டிக் தரமானதா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum