தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜீன்ஸ் : அழகுக்குள் ஆபத்து

Go down

ஜீன்ஸ் : அழகுக்குள் ஆபத்து Empty ஜீன்ஸ் : அழகுக்குள் ஆபத்து

Post  meenu Mon Jan 28, 2013 3:17 pm

மேலை நாட்டு பாடகிகளும், நம் நாட்டு நடிகைகளும், டீன்ஏஜ் பெண்களும் ஜீன்ஸ் அணிந்து செல்வதை பார்க்கும்போது, சில நேரங்களில் `இவர்களுக்கு மூச்சு முட்டுமே' என்று நினைக்கத் தோன்றும். இவ்வளவு இறுக்கமாக போட்டுக்கொண்டு எப்படி வாகனங்களில் ஏறி இறங்குவார்கள்? மாடிப்படிகளில் ஏறுவார்கள்? என்றெல்லாம் கேட்கத்தான் தோன்றும். ஆனால் ஜீன்ஸ் கன்னியர்களுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டில்லை.

அது அவர்கள் பேஷன்.. அது அவர்கள் உலகம்..! அது உடலை இறுக்கினால்தான், தாங்களும் பேஷனில் நெருக்கமாக இருக்கிறோம் என்பதை காட்ட முடியும் என்றுகூறி, சரும நிறத்தில் ஜீன்ஸ் அணிந்துகொண்டு, உடை இருக்கிறதா? இல்லையா என்று தேடும் அளவுக்கு நாகரீகத்தில் மூழ்கிப்போயிருக்கிறார்கள்.

ஸ்கின் நிறத்தில் ஜீன்ஸ் அணிந்து கொண்டு கலக்கும் பெண்கள் அதற்கு `ஸ்கின்னி' என்றொரு பெயரும் சூட்டியிருக்கிறார்கள். ஸ்கின்னி அணியும் பெண்கள் பற்றி அமெரிக்காவில் ருசிகரமாக சொல்லப்படும் விஷயம் ஒன்று உண்டு. மிக இறுக்கமான புதிய ஸ்கின்னி ஜீன்சை அணிந்துகொண்டு, அப்படியே குளியல் தொட்டிக்குள் இறங்கி உள்ளே படுத்துக் கொள்வார்களாம்.

அப்போது ஜீன்ஸ் நன்றாக தண்ணீரில் ஊறி விடும். பின்பு அது காயும் வரை அப்படியே வெளியே இறங்கி நடப்பார்களாம். உடலை நன்றாக இறுக்கிப்பிடிக்கவேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்களாம். முதலில் காட்டன், லினன், கம்பளி போன்ற துணிகளை பயன்படுத்தி ஜீன்ஸ் தயாரித்தார்கள்.

அடர்த்தி கூடிய துணியாக அது இருந்ததால் 19-ம் நூற்றாண்டில் கலிபோர்னியாவில் உள்ள தங்க சுரங்க பணியாளர்கள், வேலை நேரத்தில் அதனை அணிந்தார்கள். பின்பு தொழிற்சாலை பணியாளர்கள் அதை அணிந்தனர். அப்படி, இப்படி அது வளர்ச்சி பெற்றுக்கொண்டிருந்தாலும் அமெரிக்காவில் `கவுபாய்' சினிமா நடிகர்கள் அதை அணிய ஆரம்பித்த பிறகுதான் ஜீன்ஸ் புகழின் உச்சிக்கு சென்றது.

அந்த காலகட்டத்தில் அழகானவர்கள், ஆண்மைமிக்கவர்கள், சாகசம் நிறைந்தவர்கள் அணியும் ஆடையாக ஜீன்ஸ் கருதப்பட்டது. அப்போது ஜீன்ஸ் ஆண்கள் அணியும் உடையாக மட்டுமே இருந்தது. கெட்டியான, பாதுகாப்பான உடையாக அது இருந்ததால் விவசாய வேலை பார்க்கும் பெண்களும், பண்ணைகளில் வேலை பார்க்கும் பெண்களும் முதலில் ஜீன்ஸ் அணியத் தொடங்கினார்கள்.

அப்படியே மெல்ல மெல்ல எல்லா பெண்களும் அணியலாம் என்ற நிலை ஏற்பட்டதும் ஜீன்ஸ் புரட்சி தொடங்கிவிட்டது. இப்போது ஆண்களும், பெண்களும் வயது வித்தியாசம் இன்றி ஜீன்ஸ் அணிகிறார்கள்.

அதனை விரும்பி அணிய என்ன காரணம்? என்று அவர்களிடம் கேட்டால்..

- `தன்னம்பிக்கை தருவதாக' சிலர் சொல்கிறார்கள்.

- `சவுகரியமான உடையாக இருக்கிறது' என்று பலர் சொல்கிறார்கள்.

- `அழகு அதிகரிக்கிறது.. எடுப்பாக இருக்கிறது' என்பவர்களும் உண்டு.

- `எங்கள் வருமானத்திற்கு ஏற்ற தரமான உடை' என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இப்படி எல்லோரும் ஏதாவது ஒரு காரணத்தைக்கூறி ஜீன்ஸ்களை அணிந்தாலும், இறுக்கமான ஜீன்ஸ்களை தொடர்ச்சியாக அணியும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது ஆய்வு ரீதியாக நிரூபணம் ஆகியிருக்கிறது. தோழியர் குழு ஒன்று பஸ், ரெயில் என்று மாறிமாறி மூன்று நாட்கள் சுற்றுலா பயணம் மேற்கொண்டது.

பயணத்தின் முடிவில் குறிப்பிட்ட இடம் சென்றடைந்ததும், அவர்களில் டீன்ஏஜ் பெண் ஒருவருக்கு காலில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது. பயணத்தில் ஏற்பட்ட அசவுகரியத்தால் அது ஏற்பட்டிருக்கும் என்று முதலில் அவள் நினைத்தாள். ஆனால் மறுநாள் வலி அதிகரித்துவிடவே, டாக்டரிடம் சென்றபோதுதான் அவளால் உண்மையை உணர்ந்துகொள்ள முடிந்தது.

பயணத்திற்கு சவுகரியமானது என்று கருதி, இறுக்கமான ஜீன்சை அவள் தொடர்ச்சியாக பயன்படுத்திவிட்டாள். ஏற்கனவே அது உடலை இறுக்கிப்பிடித்திருக்க, அதற்கு மேல் இறுக்கிப்பிடிக்கும் பெல்ட்டும் அணிந்திருக்கிறாள். அது அவளுக்கு `மெரால்ஜியா பாரஸ்தெற்றிகா' என்ற பாதிப்பை உருவாக்கிவிட்டது.

பெண்களின் அடிவயிற்றில் இருந்து தொடைப் பகுதிவழியாக மெல்லிய நரம்பு ஒன்று செல்கிறது. அதை ஜீன்சும், பெல்ட்டும் போட்டிபோட்டு இறுக்கியது, கடுமையான கால் வலியை உருவாக்கிவிட்டது. இந்த வலியும், அவஸ்தையும் முழுமையாக நீங்க வேண்டும் என்றால் சில மாதங்களாகும். அதன் பாதிப்பு மிக அதிகம் ஆகிவிட்டால், ஆபரேஷன் தேவைப்படும்.

நடுத்தர வயதினர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் அவர்களது ஜீரண செயல்பாடுகள் குறையும் என்றும் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இடுப்பு பகுதி தொடர்ந்து இறுக்கப்படுவதால், அவர்கள் முது கெலும்பும் நெருக்கடிக்கு உள்ளாகிறது. ஜீன்ஸ் உடலை இறுக்குவதால் சருமத்தில் காற்று படாது. அதனால் வியர்வை தேங்கி, கிருமித்தொற்று உருவாகும். உடல், உடையால் இறுக்கப்படுவதால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.

அதனால் சருமத்தில் சுருக்கம், வறட்சி, லேசான காயங்கள் ஏற்படுவதாகவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்களைவிட ஆண்களுக்கு ஜீன்ஸ் தரும் பாதிப்பு அதிகம். `ஆண்களின் இனப் பெருக்க திறன் குறைய என்ன காரணம்?' என்பது பற்றிய ஆராய்ச்சி, சுவீடனில் நடந்தது. `இறுகிய ஆடைகள் அணிவதே அவர்களின் இனப்பெருக்க சக்தி குறைபாட்டிற்கு காரணம்' என்று கண்டறிந்தார்கள்.

அதை தொடர்ந்து `சுவிடிஷ் டைட் பேண்ட் தியரி' என்ற ஒரு கொள்கையை உருவாக்கினார்கள். ஆண்களின் இனப்பெருக்க உறுப்பான விரைப்பைகள் இயற்கையாகவே உடலில் இருந்து வெளியே தொங்குகின்றன. உடல் உஷ்ணத்தில் இருந்து விடுபட்டு குளிர்ச்சியாக இருந்தால் மட்டுமே உயிரணு உற்பத்தி நன்றாக இருக்கும் என்பதால்தான், உடலுக்கு வெளியே அது அமைந்திருக்கிறது.

இறுக்கமான ஜீன்ஸ் போன்றவைகளை அணியும்போது விரைப்பைகள் மீண்டும் உடலோடு நெருக்கப்பட்டு, உஷ்ணபாதிப்புக்கு அவை உள்ளாகின்றன. அதனால் உயிரணு உற்பத்தி குறைந்துபோகிறது. இறுக்கமான ஜீன்சை தொடர்ந்து அணிகிறவர்களின் உயிரணு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். சிறுவர்களுக்கு இறுக்கமான உள்ளாடைகளையோ, ஜீன்ஸ் களையோ அணிவிக்க வேண்டாம்.

அணிவித்தால் எதிர்காலத்தில் அவர்கள் ஆண்மைக்குறைபாடு கொண்டவர் களாக ஆகக்கூடும். ஜீன்ஸ் அணிவதால் இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், பேஷன், சவுகரியம் போன்ற வைகளை அடிப்படையாகக்கொண்டு பலரும் அதைத்தான் அணிய விரும்புவார்கள். அவர்கள் பாதிப்பு இல்லாத அளவிற்குரிய ஜீன்ஸ்களை தேர்ந்தெடுத்து அணியவேண்டும்.

`ஸ்கின் பிட்' ஜீன்ஸ் அணிபவர்கள் நெகிழ்வுதன்மை கொண்ட துணிகளில் தயாரித்தவைகளை வாங்கவேண்டும். `ஸ்ட்ரச்சபிள் ஜீன்ஸ்' என்று சொல்லப்படும் அவை, நெகிழும் தன்மை கொண்டிருப்பதால் உடலை இறுக்காது. பேஷன் என்ற பெயரிலோ, தனக்கு கட்டுடல் இருக்கிறது என்பதை காட்டவோ தன் இடுப்பளவைவிட குறைந்த அளவிலான ஜீன்ஸ்களை ஒருபோதும் வாங்கக்கூடாது.

தன் உடலுக்கு பொருத்தமானவைகளை மட்டுமே வாங்கவேண்டும். தொடர்ச்சியாக ஒருபோதும் ஜீன்ஸ்களை அணியாதீர்கள். அதுவும் கோடைகாலத்தில், ஜீன்ஸ்கள் அணிவதை தவிர்த்திடுங்கள். தூர பயணம் மேற்கொள்ளும்போது ஸ்கின் பிட் ஜீன்ஸ் அணியவேண்டாம். அணிந்துகொண்டு காலுக்கு மேல் கால்போட்டபடி பயணம் மேற்கொள்ளவும் வேண்டாம். ஜீன்ஸ் அணிபவர்கள் பேஷனைவிட ஆரோக்கியம் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum