அழகா உடை உடுத்துங்க!
Page 1 of 1
அழகா உடை உடுத்துங்க!
மனிதர்களின் அழகையும், கம்பீரத்தையும் அதிகரித்துக் காட்டுபவை ஆடைகள். நமக்கு கூடுதல் அழகையும் தரும். என்ன மாதிரியான உடைகள் நமக்கு ஏற்றது என்று தெரியாமலேயே ஒரு சிலர் ஆடை அணிவார்கள்.
வீட்டில் அணிய வேண்டிய ஆடைகளை வெளியிலேயேயும், திருமணம் போன்ற பார்ட்டிகளுக்கு சாதரணமாகவும் உடுத்திச் செல்வார்கள். இது சரியானதல்ல.
தினசரியும் நாம் விலை உயர்ந்த ஆடைகளை அணிய முடியாது. ஆனால் சாதாரண காட்டன் துணிகளை உடுத்தினால் கூட நேர்த்தியாக சுருக்கமின்றி அயர்ன் செய்து உடுத்தினால் அது ரிச்சாக தெரியும்.
ஆடை உடுத்துவது அழகோடு தொடர்புடையது மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. சீசனுக்கு ஏற்ற ஆடைகள் உடுத்துவது நம் மனதையும் மகிழ்ச்சிப்படுத்தும்.
கோடையில் காட்டன் டிரஸ் அணிவது உடலையும், உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும். எந்த ஒரு ஆடை அணிந்த உடன் அது நமக்கு ஏற்றதாக இருக்கிறதா? இது பிட் ஆகிறதா? என்று கண்ணாடியின் முன் நின்று உங்களுக்கு நீங்களே சுய விமரிசனம் செய்து கொள்ளுங்கள்.
ஆடைகள் என்பது நம் மதிப்போடு தொடர்புடையது. ஏனோ தானோ என்று உடுத்துவதை விட நமக்கு ஏற்ற உடைகளை தேர்ந்தெடுத்து அணிவதே அழகையும், மதிப்பையும் அதிகரிக்கும்.
கல்லூரிக்கு செல்லும் பெண்கள் சிலர் மினி ட்ரஸ் அணிந்து செல்வார்கள். உங்களுக்கு வேண்டுமானால் அது ஏற்றதாக இருக்கலாம். ஆனால் உங்களை பார்ப்பவர்களுக்கு அது உறுத்தலாக இருக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கம்பீரமாக தெரிய அழகா உடை உடுத்துங்க!
» விரல் அழகா... நகம் அழகா...
» மேக் அப் போடாமலேயே அழகா தெரிய
» சுருட்டை முடியா? அழகா பராமரிக்கலாம்!
» நான் இவ்வளவு அழகா – ரிச்சா!
» விரல் அழகா... நகம் அழகா...
» மேக் அப் போடாமலேயே அழகா தெரிய
» சுருட்டை முடியா? அழகா பராமரிக்கலாம்!
» நான் இவ்வளவு அழகா – ரிச்சா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum