மேக் அப் போடாமலேயே அழகா தெரிய
Page 1 of 1
மேக் அப் போடாமலேயே அழகா தெரிய
அழகு என்பது அரோக்கியம் தொடர்புடையது. ரசாயனப் பொருட்கள் நிறைந்த மேக் அப் சாதனங்களை உபயோகித்துதான் அழகாக தெரியவேண்டும் என்பதில்லை. முகத்தில் புன்னகையோடும், தன்னம்பிக்கையோடும் திகழ்ந்தாலே அழகாகலாம். எப்படி என்பதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
நல்ல தூக்கம் அவசியம்
இரவில் தூக்கம் கெட்டாலே காலையில் முகம் வீங்கிப்போய் பார்க்க சகிக்காது. எனவே 7 மணிநேரம் நன்றாக உறங்குங்கள் உடலும், முகமும் புத்துணர்ச்சியாகும். குறிப்பாக படுக்கைக்கு போகும் போது மேக் அப் போடாதீர்கள். அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
முகத்தை அடிக்கடி கழுவுங்க
தினசரி 3 மணி நேரத்திற்கு ஒருமுறை உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இதனால் சருமத்தில் அடைபட்ட அழுக்குகள் வெளியேறுவதோடு சருமத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். முகமும் பளிச்சென்று ஆகும்.
ஹேர் ஸ்டைலை மாற்றுங்கள்
முகத்திற்கு மேக் அப் போடுவதை விட உங்கள் முகத்திற்கு எற்ற ஹேர் ஸ்டைலை மாற்றுங்கள். அதுவே உங்கள் அழகை அதிகரித்துக் காட்டும்.
புத்துணர்ச்சியோடு இருங்கள்
திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல நேர்ந்தால் புருவங்களை திருத்துங்கள். கை, கால்களை ப்ரெஸ் ஆக்கும் பெடிக்யூர், மெனிக்யூர் போன்றவை செய்து கொள்ளுங்கள். இதுவே உங்களை புத்துணர்ச்சியாக்கும். மேக் அப் எதுவும் இல்லாமலேயே அழகாக தெரிவீர்கள்.
சருமத்திற்கு ஈரப்பசை
கண்கள் புத்துணர்ச்சியோடு திகழ லைட்டாக ஐ லைனர் போடுங்கள் நாள் முழுவதும் கண்கள் சோர்வடையாமல் இருக்கும். உலர்ந்த வறண்டுபோன சருமம்தான் அழகுக்கு எதிரி. எனவே சருமத்தை வறண்டு போகாமல் காப்பது அவசியம். அதிகம் தண்ணீர் அருந்துங்கள். சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் பழங்கள், காய்கறிகளை சாப்பிடுங்கள். அப்புறம் என்ன மேக் அப் இல்லாமலேயே நீங்கள் அழகு ராணிதான்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மேக் அப் போடாமலேயே அழகா தெரியலாம்!
» பெண்களுக்கான உடற்பயிற்சி
» இயற்கையான உதடு போன்று தெரிய சில டிப்ஸ்...
» பழக தெரிய வேண்டும்
» ஆண்கள் இளமையாக தெரிய சில சரும பராமரிப்புகளை தெரிந்துக்கொள்ளலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum