புத்துணர்ச்சி தரும் மஜாஜ்
Page 1 of 1
புத்துணர்ச்சி தரும் மஜாஜ்
மஜாஜ் செய்வது உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புக்கு நன்மை தருவதுடன் உடல் அழகிற்கும் சிறந்தது. மஜாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் இணையற்றது. மஜாஜ் செய்வதன் மூலம் தோலில் காணப்படும் துளைகள் விரிவடைகிறது. இதனால் உடலில் காணப்படும் தீயகழிவுகள் வியர்வை மூலம் வெளியேறி விடும்.
மஜாஜ் செய்வதால் தசைகளில் காணப்படும் இறுக்கம் குறைந்து தசைவலியை நீக்குகிறது. மஜாஜ் உடலை புத்துணர்ச்சியோடும், உற்சாகத்தோடும் இருக்க உதவும். மஜாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஒட்டம் அதிகரிக்கும், இதனால் அந்த உடல் உறுப்புகளுக்கு அளவில் உடல் ஊட்டச்சத்து கிடைப்பதுடன் அந்த உறுப்புகளில் நோய் குணமாகும் தன்மையும் அதிகரிக்கும்.
நரம்புகளில் குறைந்த அழுத்தத்துடன் மெதுவாக மற்றும் மிதமாக செய்யப்படும் மஜாஜ் ,நரம்புகளில் காணப்படும் இறுக்கத்தை குறைப்பதுடன் அவற்றை மென்மையாக்கும். சுறுசுறுப்புடன் செய்யப்படும் மஜாஜ் நரம்புகளை இளக்கமடைய வைத்து அதன் ஆற்றலை அதிகரிக்கும். மஜாஜ் செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
காய்ச்சலால் பாதிக்கபட்டிருக்கும் காலங்களில் எவ்வித மஜாஜும் செய்யக்கூடாது..கர்ப்பிணி பெண்கள் வயிற்றுப்பகுதியில் மஜாஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது. வயிற்றுபோக்கு,வாயுப் பிரச்சனை, அப்பென்டிசைட்டிஸ், சிறுகுடலில் புண்கள் அல்லது வயிற்றில் கட்டி ஆகிய பிரச்சனை உடையவர்கள் வயிற்றில் மஜாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். தோல் வியாதிகளை உடையவர்களுக்கு மஜாஜ் செய்வது நல்லதல்ல.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மஜாஜ்
» புத்துணர்ச்சி தரும் சுரைக்காய் ஒரு உன்னத மருந்து !!!
» உடலுக்கு புத்துணர்ச்சி தரும் எலுமிச்சை
» உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சி தரும் யோகா பயிற்சி
» புத்துணர்ச்சி தரும் முத்தான மூன்று பயிற்சிகள்
» புத்துணர்ச்சி தரும் சுரைக்காய் ஒரு உன்னத மருந்து !!!
» உடலுக்கு புத்துணர்ச்சி தரும் எலுமிச்சை
» உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சி தரும் யோகா பயிற்சி
» புத்துணர்ச்சி தரும் முத்தான மூன்று பயிற்சிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum