ஸ்டெம் செல் மூலம் பளபள மேனி!
Page 1 of 1
ஸ்டெம் செல் மூலம் பளபள மேனி!
உடலுக்கு அழகும், பாதுகாப்பும் தருவது தோல். சருமம் மிருதுவான தன்மை கொண்டதாக இருப்பதால் அடிக்கடி பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. லேசான காயங்கள் ஏற்பட்டால் தோல் செல்கள் உற்பத்தியாகி மீண்டும் வளர்ந்துவிடும்.
ஆனால் தீவிபத்து போன்ற பெரிய பாதிப்புகளால் தோல் சேதம் அடைந்தால், உடல் பொலிவை இழந்து விடும். சில முக்கியமான உறுப்புகள் கூட தானமாகப் பெற்று பொருத்திவிடலாம். ஆனால் தோல்தானம் கிடைப்பது அரிது.
இப்படி சிரமம் இல்லாமல் தோல் பெறுவதற்காக ரத்தத் தட்டுகளை வளர்த்து செயற்கையாக தோல் வளர்க்கும் தொழில்நுட்பம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இதைவிட முன்னேற்றமாக `ஸ்டெம்செல்' மூலம் இயற்கையாகவே தோல் வளர்க்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது.
ஈ.எஸ்.சி. எனப்படும் செயற்கை மாற்றம் செய்யபட்ட ஸ்டெம் செல்கள் தோல்பகுதியான எபி டெர்மிஸ் போல வளர்கிறது. இந்த முறையில் 40 நாட்களில் இயற்கையான தோல் பகுதி உருவாகி விடுகிறது. பிரான்ஸ் ஆய்வாளர்கள் ஆய்வகத்தில் எலிகளில் இந்த ஈ.எஸ்.சி. செல்கள் மூலம் இயல்பான தோல் பகுதியை வளர்த்து சாதனை படைத்தனர்.
இந்தத்தோல் இயல்பான தோல் போலவே ரத்தஓட்டம், வளர்ச்சிதை மாற்றம் போன்ற செயல்களில் பங்கெடுக்கிறது. ஈ.எஸ்.சி. செல்கள் இயல்பான செல்களைவிட 3 மடங்கு வேகமாக வளர்ந்து தோல் உருவாகி விடுவது இதன் சிறப்பம்சமாகும்.
"என் தலைவிதி, இயற்கை விளையாட்டு என் அழகே போய்விட்டது'' என்று மேனி அழகைப் பற்றி வருத்தம் கொள்பவர்களுக்கு இந்த ஆய்வு முடிவால் இன்னும் சில ஆண்டுகளில் பளபள மேனி கிடைக்கலாம்!

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்க ஸ்டெம் செல்
» உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்க ஸ்டெம் செல்!
» இந்தியாவில் முதல் முறையாக ஸ்டெம் செல் சிகிச்சை
» உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் ஸ்டெம் செல்! காணொளி இணைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum