உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் ஸ்டெம் செல்! காணொளி இணைப்பு
Page 1 of 1

உடலில் பாதிக்கப்பட்ட உறுப்புக்களை புதுப்பிக்க அல்லது மீண்டும் உருவாக்க ஸ்டெம் செல் (stem-cell) பயன்படுகிறது, ஆனால் தற்போது புலி, சிங்கம், கண்டாமிருகம் போன்ற அழிந்து வரும் உயிரினங்களை மீண்டும் உருவாக்க ஸ்டெம் செல் பயன்படும் என கலிபோர்னியாவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆய்வு மையத்தை (Scripps Research Institute) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஸ்டெம் செல் என்பது பல செல் உயிரினங்களில் காணப்படும் உயிரணுக்கள். இவை முற்றிலும் மேம்பாடு அடையாத வகைப்பாட்டிற்கு உட்படாதவை. உயிரணுப்பிளவின் போது புதிய உயிரணுக்களை உருவாக்குவதுடன் வெவ்வேறு திசுக்களை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஆராய்ச்சியாளர்கள் ஸ்டெம் செல் விலங்கியல் பூங்காவை உருவாக்கி அதில் பல விலங்குகளின் ஸ்டெம் செல்லை சேமித்து வைத்துள்ளனர்.
ஸ்டெம் செல்லை உடலில் செலுத்தும் போது எவ்வகை செல்லாகவும் மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. இதை புளூரிபொடன்சி(Pluripotency) என்பர். இவை விந்து அல்லது முட்டை செல்களாக மாறி இனப்பெருக்கத்திற்கு பயன்படுகின்றன. இரண்டு வகையான உயிரினங்களில் இந்த ஆய்வு துவங்கப்பட்டது. ஒன்று மரபியல் ரீதியாக மனித இனத்துடன் தொடர்புடைய மனித குரங்கு. மற்றொன்று மரபியலில் புதிய பரிணாமம் கொண்ட காண்டாமிருகம்.
விலங்குகளுக்கான ஸ்டெம் செல்களை உருவாக்க புளூரிபொடன்ட்(Pluripotent) முறையில் மனிதனுக்கு செலுத்தப்படும் அதே மரபணுக்களை விலங்குகளின் தோல் பகுதியில் செலுத்தி ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஸ்டெம் செல் தொழில்நுட்ப சிகிச்சை முறையால் இரண்டு உயிரினங்களும் பயனடைந்துள்ளன. மனிதனுக்கு நீரிழிவு நோய்க்கு ஸ்டெம் செல் முறையால் சிகிச்சை அளிப்பது போல் மனித குரங்கிற்கு அளிக்கப்பட்டது. இறுதியில் குரங்கின் நோயின் பாதிப்பு குறையத் துவங்கியது கண்டறியப்பட்டது.
அழிந்து வரும் உயிரினம் காண்டா மிருகம் என்பதால் இந்த ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சமீப காலமாக மரபணு வேறுபாடு இல்லாமல் இந்த இனம் அழிந்து வருகிறது. இந்நிலையில் ஆய்வாளர்கள் காண்டாமிருகத்தின் தோல் பகுதியில் உள்ள செல்களிலிருந்து விந்து மற்றும் முட்டைகளை உருவாக்கும் ஆய்வு மேற்கொண்டனர். இதன் மூலம் மரபணு வேறுபாட்டை உருவாக்கி இவற்றின் எண்ணிக்கையை பெருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் ஸ்டெம் செல்! காணொளி இணைப்பு
» ஸ்டெம் செல் மருத்துவம்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் கனடா தமிழர்! காணொளி இணைப்பு

» 30000 ஆண்டுகளாக பனியில் உறைந்த தாவரத்தை மீண்டும் உருவாக்கிய விஞ்ஞானிகள்! காணொளி இணைப்பு
» ஸ்டெம் செல் மூலம் பளபள மேனி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum